சுஷாந்த் சிங் மரண வழக்கு சி.பி.ஐ., விசாரிக்க பரிந்துரை

Added : ஆக 05, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சுஷாந்த் சிங் மரண வழக்கு சி.பி.ஐ., விசாரிக்க பரிந்துரை, Nitish Kumar, CBI probe, Sushant Singh Rajput case, CBI, Sushant, suicide case


பாட்னா :'பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்' என, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் பரிந்துரைத்து உள்ளார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தை சேர்ந்த, பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், 34, கடந்த ஜூன் மாதம், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி, மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


latest tamil news




சுஷாந்த் சிங்கின் மரணத்தில், அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு உள்ளதாக, பீஹார் போலீசில் சுஷாந்தின் தந்தை புகார் அளித்திருந்தார். இதையடுத்து, பீஹார் தனிப்படை போலீசார், மும்பையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். தங்களுக்கு மும்பை அரசு ஒத்துழைப்பு அளிக்க வில்லை என, பீஹார் போலீசார் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், மகனின் மரணத்துக்கு நீதி கேட்டு, பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் சுஷாந்த் சிங் தந்தை மனு கொடுத்தார். இதையடுத்து சுஷாந்த் சிங்கின் தந்தை விரும்பினால், மாநில அரசு, சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கும் என, நிதிஷ்குமார் கூறியிருந்தார்.

இந்நிலையில், பாட்னாவில், அவர் கூறியதாவது:சுஷாந்த் குடும்பத்தினர் ஒப்புதல் தெரிவித்ததன் பேரில், அவரது மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க, மாநில அரசு பரிந்துரைக்கிறது. சி.பி.ஐ., விசாரணைக்கான அனைத்து அடிப்படை சட்ட நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான பரிந்துரையை, மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பி விடுவோம்.இவ்வாறு, அவர் கூறினார். பீஹார் அரசு பரிந்துரைக்க முடியாதுசுஷாந்த் சிங் மரணம் பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது பற்றி, சுஷாந்தின் காதலி ரியாவின் வழக்கறிஞர் சதிஷ் மனேஸ்ஷிண்டே, மும்பையில் கூறியதாவது:

சுஷாந்த் சிங்கின் மரணம் பற்றி விசாரிக்க, பீஹார் போலீசாருக்கு எந்த உரிமையும் இல்லை. அப்படிஇருக்கையில், சுஷாந்த் மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க, பீஹார் அரசால் பரிந்துரைக்க முடியாது. இந்த வழக்கை, பீஹார் போலீசார் விசாரிக்க முடியாது என்பதை தெரிந்து தான், சி.பி.ஐ.,விசாரணை என, பீஹார் அரசு கூறி, வழக்கை திசை திருப்ப முயற்சிக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-ஆக-202018:02:41 IST Report Abuse
J.V. Iyer ஹிந்தி மற்றும் தமிழ்ப்பட உலகம் கருப்பு பண முதலைகளிடம் சிக்கி உள்ளது. இதனால் சீரழிகிறது.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
05-ஆக-202008:44:49 IST Report Abuse
 Muruga Vel மிக பிரபலமான அரசியல் தலைவரின் வாரிசு சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் ..
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
05-ஆக-202006:25:51 IST Report Abuse
Indhuindian சார் எங்க வூர்லயும் இந்த மாதிரி தீர்வு காணப்படாத கொலைகள் நெறயவே இருக்கு அதுக்கு ஒரு வழி பண்ணுவாங்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X