ஜாதவ் வழக்கில் 3 வழக்கறிஞர்கள்'அமிகஸ் கியூரி'யாக நியமனம்

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஜாதவ் வழககு, 3 வழக்கறிஞர்கள் 'அமிகஸ் கியூரி'யாக நியமனம், Pakistan court, appointment, senior lawyers, amici curiae, Kulbhushan Jadhav's case

இஸ்லாமாபாத் :குல்பூஷன் ஜாதவ் வழக்கில் தங்களுக்கு உதவ, மூன்று வழக்கறிஞர்களை, 'அமிகஸ் கியூரி' யாக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவ், தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி, பாகிஸ்தான் போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு, பாக்., ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.இந்த தீர்ப்புக்கு, சர்வதேச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய, ஜாதவுக்கு அனுமதி அளிக்கும் படியும், சர்வதேச நீதிமன்றம், பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது.இதையடுத்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில், ஜாதவின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் துவங்கியது, அப்போது நடந்த விசாரணையில், ஜாதவ் சார்பில் வாதாடுவதற்கு வழக்கறிஞரை நியமிக்க, இந்தியாவுக்கு அனுமதி அளித்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


latest tamil news




இந்நிலையில், ஜாதவ் வழக்கில் தங்களுக்கு உதவி செய்ய, மூன்று வழக்கறிஞர்களை, அமிகஸ் கியூரி யாக, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நேற்று நியமித்தது.மூத்த வழக்கறிஞர்களான அபித் ஹாசன் மன்ட்ரோ, மக்துாம் அலிகான், ஹமீத் கான் ஆகியோரை அமிகஸ் கியூரியாக, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதர் மினல்லா, நீதிபதி மிரன்குல் ஹாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு நியமித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஆக-202015:16:36 IST Report Abuse
Santhakumar Srinivasalu ஒரு தனி மனிதனை துன்புற்த்தி பாகிஸ்தான் என்ன சாதிக்க போகிறது
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
05-ஆக-202012:12:18 IST Report Abuse
Indian  Ravichandran பாகிஸ்தான் இவரை விடிவிக்கவேண்டும், ஒரு வெலாய் இவர் உளவாளி என்றாலும் விடுவிப்பதே சரி தண்டனை போதும், பாக்கிஸ்தான் உளவு பார்த்தது இல்லையா அணைத்து நாடுகளும் உளவூ பார்க்கும். ஜாதவை வைத்துக்கொண்டு ட்ராமா போடுவதை நிறுத்தாவிட்டால் ஒரு நாள் கடுமையான பாதிப்பை பாக்கி சந்திக்கும்
Rate this:
Cancel
05-ஆக-202008:12:54 IST Report Abuse
V Venkatachalam, Chennai 87 குல்பூஷன் பத்திரமாக இந்தியா வந்து சேரவேண்டும் என்று பிராத்திக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X