மீண்டும் குழப்பம் ஏற்படுத்துகிறார்: கவர்னர் மீது அமைச்சர் புகார்

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
மீண்டும் குழப்பம் ஏற்படுத்துகிறார்: கவர்னர் மீது அமைச்சர் புகார்

புதுச்சேரி :'சுகாதாரத் துறையில் மீண்டும் குழப்பத்தை கவர்னர் ஏற்படுத்துகிறார்' என, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.அவர் நேற்று அளித்த பேட்டி:அவசர தேவைகளுக்காக அனுப்பப்படும் முக்கிய கோப்புகளுக்கு உடனடியாக கையெழுத்திடுவது இல்லை. உதாரணமாக, சுகாதாரத் துறைக்கு கூடுதல் டாக்டர்கள், செவிலியர்கள்,பணியாளர்கள் நியமனம் செய்வது தொடர்பாக ஜூலை 7ம் தேதி அனுப்பிய கோப்பு இன்று வரை திரும்ப வரவில்லை. கடந்த 30ம் தேதியில் இருந்து நிதித் துறையில் உள்ளது.


latest tamil news




கோப்பு எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்கே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.சுகாதாரத் துறை அதிகாரிகள் திட்டமிட்டப்படி முறையாக பணியாற்றிக் கொண்டுள்ளனர். ஆனால், மீண்டும் குழப்பம் ஏற்படுத்துவது போல உள்ளது. ஒவ்வொரு நாள் காலையிலும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஏற்கனவே விவாதிக்கப்பட்ட விஷயங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்கிறோம். முதல்வரும் பேசுகிறார். அதற்கு பிறகு அதிகாரிகளிடம் கவர்னர் பேசி, மீண்டும் குழப்பம் செய்வது மாதிரி உள்ளது.

அவரது இஷ்டத்துக்கு உத்தரவு பிறப்பித்து, இந்த ரிப்போர்ட் அளிக்க வேண்டும், அந்த ரிப்போர்ட் அளிக்க வேண்டும் என கேட்கிறார். ரிப்போர்ட் அளிப்பதற்கே அதிகாரிகளுக்கு நேரம் சரியாக இருக்கிறது. மனதுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது. அதற்காக விட்டுவிட்டு செல்ல முடியாது. எங்களால் முடிந்த வரை மக்களுக்கு பணியாற்றுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
05-ஆக-202022:09:09 IST Report Abuse
ocean நாராயணசாமிக்கு அந்த அம்மாகிட்ட பேச தெரியவில்லை மந்திரிகளை உசுப்பி விடுகிறார்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
05-ஆக-202017:29:22 IST Report Abuse
Endrum Indian அதன் உள் பொதிந்த அர்த்தத்தை பார்த்தால் இந்த சுகாதாரத்துறை அமைச்சர் அறிவின் விளிம்பில் இருப்பது மிகத்தெளிவாகத் தெரிகின்றது. அதிகாரிகள் என்ன ரிப்போர்ட் கொடுக்கவேண்டும் என்று கூட இந்த அமைச்சருக்குத் தெரியாததால் தான் கவர்னர் கேட்கின்றார் என்று தெரிகின்றது. இதற்கு ஒரே தீர்வு கவர்னர் முதலமைச்சர் ஆவது முதலமைச்சர் கவர்னர் ஆவது தான் அப்புறம் பூதாகரமாக வெளியே வரும் முதலமைச்சரின் வண்டவாளங்கள்.
Rate this:
Cancel
Ganesh Shetty - chennai,இந்தியா
05-ஆக-202015:54:42 IST Report Abuse
Ganesh Shetty அப்படியே முதல்வரும் சுகாதார அமைச்சரும் குறையை பேசி தீர்துட்டாலும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X