பொது செய்தி

இந்தியா

ராமா... ராமா நாமம் சொல்லி பாடணும் ! அயோத்தியில் பூமி பூஜை: உலகம் முழுவதும் விழாக்கோலம்

Added : ஆக 05, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
ராமா... ராமா நாமம் சொல்லி பாடணும் ! அயோத்தியில்  பூமி பூஜை: உலகம் முழுவதும் விழாக்கோலம்

பகவான் ஸ்ரீராமர் பிறந்த அயோத்தி மண்ணில் அவருக்கு கோயில் கட்டுவற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

மகாவிஷ்ணு அவதாரங்களில் சிறப்பானது ராமாவதாரம். மனித அவதாரம் எடுத்து வாழ்க்கை தத்துவத்தை சாமான்யனுக்கு உணர்த்தினார் ராமபிரான். ராமாயண காப்பிய நாயகனான இவர் ஏகபத்தினி விரதனாக இருந்தார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதை கடைபிடித்தார். 'ஒரு சொல் ஒரு வில் ஒரு இல்' என்று வாழ்ந்தார்.தினமும் ராமா ... ராமா என்ற திருநாமத்தை ஒருவர் சொல்லும் போது துன்பங்களில் இருந்து விடுபடலாம். பூமியில் கடவுளின் ராஜ்யம் அமைவதே ராமராஜ்யம். இதற்கு அச்சாரமாக அயோத்தியில் ராமபிரானுக்கு பிரமாண்ட கோயில் கட்டப்பட உள்ளது. பேராசிரியர்கள் வினாய் பாண்டே, ராமச்சந்திர பாண்டே . ராமநாராயண் திரிவேதி அடங்கிய குழுவினர் பூமி பூஜை செய்வர்.


30 ஆண்டு கனவுகுஜராத்தின் ஆமதாபாத்தை சேர்ந்த சோம்புரா குடும்பத்தினர் ராமர் கோயிலை வடிவமைத்துள்ளனர். இவர்கள் 15 தலைமுறையாக ஸ்தபதியாக உள்ளனர். இந்தியாவில் அக் ஷார்தம், சோம்நாத் உள்பட 131 மற்றும் லண்டன் சுவாமி நாராயண் உள்பட வெளிநாடுகளில் 15 கோயில்களை வடிவமைத்துள்ளனர். தற்போது சந்திரகாந்த் சோம்புரா 77, மேற்பார்வையில் அவரது மகன்கள் நிகில் ,55, ஆஷிஷ் 49, இணைந்து அயோத்தி ராமர் கோயிலை புதிதாக வடிவமைத்துள்ளனர்.

ஆஷிஷ் கூறுகையில், தந்தை சந்திரகாந்த் இளம் பருவத்தில் இருந்தே கோயில் வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர். வாஸ்து சாஸ்திரம், சிறபக்கலை நுணுக்கங்கள் அறிந்தவர். 1989-ல் ராமர் கோயில் மாதிரியை ஆறு மாதத்தில் வடிவமைத்தார். 1989-ல் ராம் ஜென்ம பூமி வளாகத்துக்கு அப்போதைய வி.எச். பி..தலைவர் அசோக் கிங்கால் என் தந்தையை அழைத்து சென்றார்.
அப்பகுதி ராணுவ பாதுகாப்பில் இருந்தது. இடத்தை அளப்பதற்கு எந்த பொருளையும் கொண்டு செல்ல அனுமதியில்லை. கால்களால் அளவு எடுத்தார். 30 ஆண்டுகளுக்கு பின் அவரது கனவு நனவாக உள்ளது.

தற்போது வயது மூப்பு காரணமாக ராமர் கோயில் வடிவமைப்பு தொடர்பான ஆலோசனைகளை வீட்டில் இருந்தவாறு தருகிறார். வட இந்தியாவில் பிரபலமான நாகரம் கட்டடகலை அடிப்படையில் ராமர் கோயில் அமையும். கோயில் கருவறையின் மீதான விமானம் சதுர அமைப்பில் இருக்கும் எண் கோண வடிவில் கருவறை என கோயில் பிரமாண்டமாக இருக்கும் என்றார்.


ராமேஸ்வரம் மண்பூமி பூஜைக்கு ராமேஸ்வரம் அயோத்தியா பட்டினம் , கர்நாடகாவின் சாமூண்டிஸ்வரி மலை, ராஜஸ்தானின் ஜான்சி கோட்டை, சித்தூர்கார், பஞ்சாப் அமிர்தசரஸ், பொற்கோயில், பத்ரிநாத்தில் இருந்து மண் எடுத்து வருகின்றனர். திபெத்தின் மானஸ்ரோவர் ஏரி, கன்னியாகுமரி மூக்கடல், திரிவேணி சங்கமம், காவிரி துங்கபத்ரா, யமுனா,இமய மலையின் அலக்நந்த் நதிகளில் இருந்து நீர் எடுத்து வருகின்றனர்.


நவரத்தின உடைராம் ஜென்ம பூமியில் ஏற்கனவே குழந்தை ராமர் சிலை உள்ளது. இதற்கு பூமி பூஜையின் போ நவரத்தின கற்கள் பதித்த பட்டாடை அணிவிக்கப்படுகிறது. இ பச்சை நிறத்தில் காவி நிற ஓரங்களுடன் இருக்கும். இதை அயோத்தியில் தையல் கடை நடத்தும் பகவத் பிரசாத் சங்கர் லால் சகோதரர்கள் உருவாக்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
05-ஆக-202010:32:30 IST Report Abuse
தஞ்சை மன்னர் இந்திய அரசியல் வாழ்வில் இது இருள் சூழ்ந்த நாள்
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
05-ஆக-202010:31:31 IST Report Abuse
தஞ்சை மன்னர் இந்து என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்பட வேண்டிய நாள் இது
Rate this:
06-ஆக-202004:36:04 IST Report Abuse
தீதும் நன்றும் பிறர் தர வாராஇதுல என்ன வெட்கம்...பெருமை படுங்க..... பெரும்பான்மை மக்களின் உணர்வு அங்கீகரிக்க பட்டு உள்ளது.....
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
05-ஆக-202010:30:07 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஐயோ பாவம் முதலில் இந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு தெரியும் என்று சொல்லுங்கள் நீங்கள் சொல்லுவது அந்த 3% கும்பல் தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X