அரசியல் செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து?

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (197)
Share
Advertisement
சென்னை: 'கருப்பர் கூட்டம்' விவகாரத்தில், தி.மு.க.,வுக்கு எதிராக உண்டான எதிர்ப்பு அலைகளை சமாளிக்க, அக்கட்சியின் தலைவர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.கருப்பர் கூட்டம் என்ற, யு டியூப் சேனலில், ஹிந்துக்களின் மனம் புண்படும்படியாக, வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. சமீபத்தில், முருகப் பெருமானை போற்றி பாடும்,
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை: 'கருப்பர் கூட்டம்' விவகாரத்தில், தி.மு.க.,வுக்கு எதிராக உண்டான எதிர்ப்பு அலைகளை சமாளிக்க, அக்கட்சியின் தலைவர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருப்பர் கூட்டம் என்ற, யு டியூப் சேனலில், ஹிந்துக்களின் மனம் புண்படும்படியாக, வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. சமீபத்தில், முருகப் பெருமானை போற்றி பாடும், கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிடப்பட்டது. இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஹிந்து அமைப்புகளும், ஹிந்து மக்களும், இந்த கும்பலுக்கு எதிராக கொந்தளித்தனர்.

இவ்விவகாரத்தில் கைதாகியுள்ள செந்தில்வாசன், தி.மு.க.,வின் 'ஐ.டி., அணி' எனப்படும், தகவல் தொடர்பு பிரிவில் முக்கிய பொறுப்பில் இருப்பது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனால், இவர்களுக்கு பின்னணியில், தி.மு.க., இருப்பது உறுதியாகி இருப்பதாக, போலீஸ் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


latest tamil news



இந்நிலையில், இந்த எதிர்ப்பை சரிக்கட்ட, திமுக மேலிடத்திலிருந்து, கட்சியினருக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தி.மு.க., விவசாய அணி மாநில நிர்வாகி ஒருத்தர், 'முருகப் பெருமானின் ஆடிப்பெருக்குத் திருநாளை மனதார வாழ்த்துகிறேன்' என, முருகன் படத்தோட போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார். இதற்கு வரவேற்பு தெரிவித்த திமுக மேலிடம், இதே போல், ஹிந்துக்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து போஸ்டர் அடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கும் வாழ்த்து போஸ்டர் ஒட்ட உள்ளனர். அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து அறிக்கை தெரிவிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க.. டீக்கடை பெஞ்ச்

https://www.dinamalar.com/news_detail.asp?id=2588994

Advertisement




வாசகர் கருத்து (197)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
I love Bharatham - chennai,இந்தியா
11-ஆக-202014:21:03 IST Report Abuse
I love Bharatham அவர்கள் பதிவிற்கு வர ...அல்லாஹ் .....யேசுவையும் ....புறக்கணிக்க வேண்டிய காலம் வறுமாயின் அதயும் செய்வார்கள் ....அவர்கள் இலக்கு ....பதவி .....கொள்கை எல்லாம் அப்பரூம்
Rate this:
Cancel
Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) விநாயக சதுர்த்திக்கு சுடலை வாழ்த்து சொல்வதெல்லாம் நடக்காத கதை. வீட்டில் மனைவியுடன் திருட்டுத்தனமாக விநாயகரை கும்பிடுவதோடு சரி... முதலில் இப்படிப்பட்ட இந்துவிரோதக்கட்சியில் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கும் இந்துக்கள் மனம் திருந்தவேண்டும்... இந்துமதத்தை சேர்ந்த தொண்டர்கள் அனைவரும் இந்துமதத்தை இழிவுபடுத்தும் தீயமுகவிட்டு விலகி வெளியே வரவேண்டும்...
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
09-ஆக-202018:22:38 IST Report Abuse
sankar மார்கழி மாதம் பஜனை திருவிழா கூட மாவட்ட செயலாளர்கள் நடத்தலாம் -
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X