சென்னை: 'கருப்பர் கூட்டம்' விவகாரத்தில், தி.மு.க.,வுக்கு எதிராக உண்டான எதிர்ப்பு அலைகளை சமாளிக்க, அக்கட்சியின் தலைவர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பர் கூட்டம் என்ற, யு டியூப் சேனலில், ஹிந்துக்களின் மனம் புண்படும்படியாக, வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. சமீபத்தில், முருகப் பெருமானை போற்றி பாடும், கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிடப்பட்டது. இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஹிந்து அமைப்புகளும், ஹிந்து மக்களும், இந்த கும்பலுக்கு எதிராக கொந்தளித்தனர்.
இவ்விவகாரத்தில் கைதாகியுள்ள செந்தில்வாசன், தி.மு.க.,வின் 'ஐ.டி., அணி' எனப்படும், தகவல் தொடர்பு பிரிவில் முக்கிய பொறுப்பில் இருப்பது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனால், இவர்களுக்கு பின்னணியில், தி.மு.க., இருப்பது உறுதியாகி இருப்பதாக, போலீஸ் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், இந்த எதிர்ப்பை சரிக்கட்ட, திமுக மேலிடத்திலிருந்து, கட்சியினருக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தி.மு.க., விவசாய அணி மாநில நிர்வாகி ஒருத்தர், 'முருகப் பெருமானின் ஆடிப்பெருக்குத் திருநாளை மனதார வாழ்த்துகிறேன்' என, முருகன் படத்தோட போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார். இதற்கு வரவேற்பு தெரிவித்த திமுக மேலிடம், இதே போல், ஹிந்துக்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து போஸ்டர் அடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கும் வாழ்த்து போஸ்டர் ஒட்ட உள்ளனர். அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து அறிக்கை தெரிவிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க.. டீக்கடை பெஞ்ச்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE