பொது செய்தி

இந்தியா

ராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் இணையதளத்தில் நேரலை

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (72)
Share
Advertisement
அயோத்தி: அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, இன்று (ஆக.,05) நடக்கிறது. பிரதமர் மோடி 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை, கருவறை அமையும் இடத்தில் வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியை நமது தினமலர் இணையதளத்தில் நேரலையில் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர்
Ayodhya, RamMandir, BhumiPujan, RamTemple, Modi, Advani, DinamalarLive, அயோத்தி, ராமர், கோவில், பூமி பூஜை, மோடி, அத்வானி, தினமலர், நேரலை

அயோத்தி: அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, இன்று (ஆக.,05) நடக்கிறது. பிரதமர் மோடி 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை, கருவறை அமையும் இடத்தில் வைத்து, அடிக்கல் நாட்டுகிறார்.

ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியை நமது தினமலர் இணையதளத்தில் நேரலையில் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


latest tamil newsஉத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அனுமதி வழங்கியது. கோவில் கட்டுவதற்காக, மத்திய அரசு, 'ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா' என்ற பெயரில், அறக்கட்டளையை அமைத்தது.

இந்நிலையில், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று காலை நடக்கிறது. இதையொட்டி, அயோத்தி மாவட்டம் முழுவதும், விழாக்கோலம் பூண்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு, பூமி பூஜைக்கான சடங்குகள், அயோத்தியில் இரு நாட்களுக்கு முன்னரே துவங்கின. இதற்காக, வாரணாசியிலிருந்து வேதவிற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


Advertisementமோடி வருகை


இன்று காலை, 8:00 மணி முதல், அடிக்கல் நாட்டு விழாவுக்கான பூஜைகள் துவங்குகின்றன. விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, டில்லியிலிருந்து, காலை 9:35 மணிக்கு சிறப்பு விமானத்தில் புறப்பட்டு, காலை 11;30 மணிக்கு அயோத்தி வந்தார். முதலில், ஹனுமன்கர்கி கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்கிறார். அடுத்து, 12:00 மணிக்கு, ராம ஜன்மபூமிக்கு செல்கிறார். பகல், 12:40 மணிக்கு, கோவில் கருவறை அமைய உள்ள இடத்தில், 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட செங்கல்லை வைத்து அடிக்கல் நாட்டுகிறார். மதியம், 2:00 மணியளவில், அயோத்தியிலிருந்து புறப்பட்டு, டில்லி திரும்புகிறார்.

கொரோனா பரவல் காரணமாக, 200 வி.வி.ஐ.பி.,க்களுக்கு மட்டுமே விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தி நிலம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரி, முக்கிய விருந்தாளியாக பங்கேற்கிறார். ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட, பலரும் விழாவில் பங்கேற்கின்றனர்.


நனவான மோடியின் கனவுlatest tamil newsபா.ஜ., மூத்த தலைவர் அத்வானி 1990-ல் குஜராத்தில் இருந்து அயோத்திக்கு நடத்திய ரத யாத்திரையிலும், 1991-ல் பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் ஒற்றுமை யாத்திரையின் போதும் பிரதமர் மோடி அயோத்திக்கு உடன் சென்றார். அங்கு நிருபர்களிடம் மோடியை காட்டி, ‛இவர் தான் குஜராத் பா.ஜ. தலைவர்,' என ஜோஷி அறிமுகம் செய்து வைத்தார். மோடியிடம் நிருபர்கள் ‛அடுத்த முறை அயோத்திக்கு எப்போது வருவீர்கள்?' எனக்கேட்டனர். அதற்கு அவர், ‛ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருவேன்,' என்றார். இன்று அவர் அடிக்கல் நாட்டுகிறார். தான் கூறியது போலவே மோடியின் கனவு நிறைவேறியுள்ளது.


கனவு நிறைவேறியதுlatest tamil newsராமர் கோவில் கட்டுவதில் மிகவும் ஆர்வம் காட்டிய பா.ஜ., மூத்த தலைவரான எல்.கே. அத்வானி பூமி பூஜையில் பங்கேற்றவில்லை. வீடியோ கான்பரன்சிங் மூலம் பார்வையிடுகிறார். பூமி பூஜை குறித்து அவர் கூறியதாவது:
ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு, அந்த கனவு நிறைவேறியுள்ளது. இது எனக்கு மட்டுல்ல, நாட்டு மக்களுக்கு மகத்தான, வரலாற்று சிறப்புமிக்க நெகிழ்ச்சியான நாள். ராமர் கோவில் கட்டுவதற்கான பல தியாகங்களை மேற்கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலரில் நேரலைlatest tamil newsஅடிக்கல் நாட்டு விழாவை ஒட்டி, அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விழாவை பல்வேறு, தூர்தர்ஷன் உள்ளிட்ட 'டிவி' சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன. நமது தினமலர் வாசகர்களுக்காக, தினமலர் இணையதளத்திலும் ராமர் கோவில் பூமி பூஜையை நேரலையில் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
05-ஆக-202014:43:23 IST Report Abuse
Raj இதற்க்காக உண்மையாக உழைத்த அத்வானி என்றோ ஓரம் கட்டப்பட்டு விட்டார். நாளைய வரலாற்றை யார் அறிவார்? பொறுத்திருந்து பார்ப்போம்
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
05-ஆக-202015:45:41 IST Report Abuse
Chowkidar NandaIndiaகான்க்ராஸ் கட்சிக்காக உண்மையாக உழைத்த பல தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டு ஆண்டுகள் பலவாயிற்று. இத்தாலி குடும்பம் மட்டுமே இப்போது கட்சியில் கோலோச்சுகிறது. இதை உணர்ந்தும் அதற்கு முட்டு கொடுப்போரை என்னவென்று...
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
05-ஆக-202014:07:22 IST Report Abuse
Ellamman S Ve சேகருக்கு அழைப்பு இல்லையா??? ஏன் அங்கு ஆஜராகவில்லை???
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
05-ஆக-202013:56:36 IST Report Abuse
Ellamman இந்த கோவிலுக்காக எவ்வளவோ பேர் என்ன என்னவோ உழைப்பை கொட்டி கஷ்டப்பட்டார்கள்....ஆனால் இப்போ எல்லோருடைய உழைப்பையும் தனதாக்கிக்கொண்டார் இந்த பிரதமர்....வாழ்க அவருடைய தலைமை பண்பு.. வளர்க அவர் ஆற்றும் இத்தகைய தொண்டு....ஒரே ஒரு ஆறுதல்.... ஒரு பிற்படுத்தப்பட்டவர் தலைமையில்..இன்னொரு பிற்படுத்தப்பட்டவர் முன்னிலையில் இது நடக்கிறது....முன்னேறிய வகுப்பினர் எல்லோரும் ஓரமாக நின்று வேடிக்கை மட்டும் பார்க்கிறார்கள்....காலச்சக்கரம் நன்றாக சுழல்கிறது.....
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
05-ஆக-202018:08:04 IST Report Abuse
 Muruga Velநடத்தி வைத்து பெருமை சேர்த்தது வேத விற்பன்னர்கள் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X