நீலகிரியில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்தன, மக்கள் அவதி

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (1)
Advertisement
ஊட்டி: நீலகிரியில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதனால், மரங்கள் சாய்ந்தன. மின்சாரம் தடைபட்டுள்ளதால், குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அவலாஞ்சியில் அதிகபட்சமாக 39 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் மழை பகுதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்நிலையில், கடந்த ஒரு
மழை, நீலகிரி, ஊட்டி, கனமழை, மழை, Rain, Rainfall, Climate, Tamil Nadu, TN, TN News, Tamil Nadu News, Climate news, Districts, TN districts, red alert, nilgiris

ஊட்டி: நீலகிரியில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதனால், மரங்கள் சாய்ந்தன. மின்சாரம் தடைபட்டுள்ளதால், குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அவலாஞ்சியில் அதிகபட்சமாக 39 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மழை பகுதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் 50 க்கு மேற்பட்ட இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத்தலார், எமரால்டு, மஞ்சூர் சுற்று வட்டார பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் பலத்த காற்றுக்கு மேற்கூரை காற்றில் பறந்து சேதமானதுடன், வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்தது. 10க்கு மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமானது.

குந்தா அணைக்கு வினாடிக்கு, 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி, அணை முழு கொள்ளளவை எட்டியதால், அணை திறக்கப்பட்டு இரண்டு மதகுகளில் வினாடிக்கு, 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதிக பட்ச மழை, அவலாஞ்சியில், 390 மி.மீ., மழை பதிவு. சராசரி மழை அளவு 77.29 மி.மீ., பதிவானது. இதுவரை, 20 முகாமில், 1000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


பாதிக்கப்பட்ட பகுதிகளில், பவர் ஷ மெஷின் உதவியுடன் மற அறுக்கப்பட்டு வருகிறது. பொக்லைன் உதவியுடன் பேரிடர் மீட்பு குழுவினர் துரித கதியில் வேலை செய்து வருகின்றனர்.ஊட்டி - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பலத்த காற்றால் ரோட்டின் குறுக்கே விழும் மரங்கள் மற்றும் மண்சரிவுகளை ஐந்து ஜே.சி.பி.,க்கள் கொண்டு அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்தது.latest tamil news
பெரியளவிலான பாதிப்புகள் ஏதும் இல்லை. எனினும், முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.கூடலுார் பகுதியில், நேற்று முன்தினம், மாலை முதல் கனமழை பெய்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காலம்புழா ஆற்றில், நேற்று அதிகாலை ஏற்பட்ட வெள்ளம், புறமனவயல் பழங்குடி கிராமத்தை சூழந்து, குடியிருப்புக்குள் புகுந்தது. சில வீடுகள் சேதமடைந்தன. மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். அவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.


latest tamil news

நிவாரண மையங்கள்நேற்று, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:வரும், 8ம் தேதி வரை காற்றுடன் கூடிய கன மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாவட்டத்தில், 283 பேரிடர் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. பேரிடர் பாதிப்பை தடுக்க, 40 பேர் கொண்ட இரு குழுக்கள் நீலகிரி வர உள்ளன. அதில்,ஒரு குழுவினர் வந்துள்ளனர். தேவைப்பட்டால் தேசிய பேரிடர் குழுக்களை அழைக்க உள்ளோம்.அனைத்து அரசு பள்ளிகளும், முகாமாக மாற்றப்பட்டுள்ளன. 300 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. மக்கள், தாங்கள் வசிக்கும் பகுதியில் பாதுகாப்பு இல்லை என்றால், உடனடியாக, 1077க்கு போன் செய்து தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க, தாலுகா வாரியாக, அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு கலெக்டர் கூறினார்.


மழை அளவு


இன்று (ஆக.,5)காலைநிலவரப்படி,

ஊட்டி : 39.4 மி.மீ.,

நடுவட்டம் : 147 மி.மீ.,

கிளன்மார்க்ன். : 137 மி.மீ.,

கல்லட்டி : 22 மி.மீ.,

மசினகுடி. : 24 மி.மீ.,

குந்தா: 70 மி.மீ.,

அவலாஞ்சி : 390 மி.மீ.,

எமரால்ட் : 145 மி.மீ.,

கெடாய் : 10 மி.மீ.,

கிண்ணகொராய் : 14 மி.மீ.,

மேல் பவானி: 306மி.மீ.,

பலகோலா : 111 மி.மீ.,

குன்னூர் : 6 மி.மீ.,

குன்னூர் புறநகர் : 2 மி.மீ.,

கேத்தி : 13 மி.மீ.,

பர்லியார் : 4 மி.மீ.,

யெடபள்ளி. : 2 மி.மீ.,

ஹெலிகல் : 6 மி.மீ.,

கோத்தகிரி : 4 மி.மீ.,

கோடநாடு : 13 மி.மீ.,

கீழ் கோத்தகிரி : 2 மி.மீ.,

கூடலூர் : 128 மி.மீ.,

தேவாலா : 126 மி.மீ.,

அப்பர் கூடலூர் : 102 மி.மீ.,

ஓ வேலி : 40 மி.மீ.,

செருமுள்ளி : 44 மி.மீ.,

படன்துறை : 37 மி.மீ.,

பந்தலூர் : 161 மி.மீ.,

சேரன்கோடு : 136 மி.மீ.,

மாவட்டத்தில் சராசரியாக 77.29 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஆக-202014:26:13 IST Report Abuse
ரவிச்சந்திரன் முத்துவேல் மழை பொழிகிறது வேண்டிய அளவு அதனை தேக்கிவைக்க என்ன திட்டங்களை செய்தார்கள் இதுநாள் வரைக்கும்? குடி மரமத்துப்பணிகள் போர்க்கள அடிப்படையில் நிறைவேற்றி இருந்தால் இப்போது இந்த மழை நீர் அனைத்தும் சேமிக்கப்பட்டிருக்கும்? பார்ப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X