சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

போலீசார் திருந்தாவிட்டால் அரசா பொறுப்பு?

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
போலீசார் திருந்தாவிட்டால் அரசா பொறுப்பு?

'போலீசார் திருந்த வேண்டுமே தவிர, அரசா திருந்த வேண்டும்; சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகும் திருந்தாவிட்டால், அரசா பொறுப்பேற்க முடியும்...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர், உதயநிதி ஸ்டாலின் அறிக்கை:

சென்னை, புழலில், கூலித்தொழிலாளி சீனிவாசனை, காவல் துறையினர் தாக்கியுள்ளனர். அவமானத்தில் தீக்குளித்து இறந்துள்ளார். சாத்தான்குளம் சம்பவத்துக்குப் பிறகும், காவல் துறை அட்டூழியங்கள் தொடர்வது, அரசின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது!

'எல்லாம் சொல்றீங்க; தி.மு.க.,வுக்கு போக மாட்டேன்னு சொல்ல மாட்டேன்ங்கிறீங்களே...' என, கூற வைக்கும் வகையில், பா.ஜ., பிரமுகர் நயினார் நாகேந்திரன் பேட்டி:

தமிழிசைக்கு, தெலுங்கானா மாநில கவர்னர் பதவி கிடைத்ததால், தகுதி உடைய அனைவரும் எதிர்பார்ப்பது போல, நானும், மாநில தலைமை பதவியை எதிர்பார்த்தேன். எனினும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்குத் தான் அந்தப் பதவி என்பது, முடிவாகி விட்டதால், அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.

'நாம் ஒருவர்; நமக்கு ஒருவர் என்ற ரீதியில் செயல்படும், நாம் தமிழர் கட்சிக்கு, இரு மொழி கொள்கையா...' என, கிண்டல் செய்யத் துாண்டும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:


latest tamil news




மும்மொழிக் கொள்கையை நடைமுறை படுத்த மாட்டோம் என, இரு மொழிக் கொள்கையில் உறுதி காட்டியிருக்கும் முதல்வரை பாராட்டுகிறேன்.

'எத்தனை முறை தான் முகமூடியை கிழிப்பீங்க; மக்களுக்கு அவர்களின் இரட்டை வேடம் நன்கு தெரியும்; வேறு வழிகளில், பிரசாரம் பண்ணுங்க...' என, அறிவுரை கூறத் துாண்டும் வகையில், பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா அறிக்கை:

இது, 1960 அல்ல. ஏற்கனவே, தி.மு.க., முன்னணி தலைவர்கள் நடத்தும், மும்மொழி பள்ளிகள் பட்டியல் வெளியிட்டு உள்ளேன். மேலும், தமிழகம் முழுதும் திராவிட இயக்க தலைவர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் பட்டியலை, விரைவில் வெளியிடுவோம்; அவர்களின் இரட்டை வேடம் கிழிக்கப்படும்.

'பா.ஜ.,வில் ஜாதி வித்தியாசம் பார்க்க மாட்டார்கள்; நீங்கள் தான் கிளப்பி விடுறீங்க...' என, கண்டிக்கத் துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை:

அயோத்தியில், ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமரை அழைப்போர், ஜனாதிபதியை அழைக்கவில்லை. இது ஏன்... அவரே தன்னை அழைக்க வேண்டாமென சொல்லி விட்டதாக, அவரையே சொல்ல வைத்தாலும் வியப்பில்லை.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
05-ஆக-202019:52:46 IST Report Abuse
கல்யாணராமன் சு. உதயநிதி தீமையா முடியப்போவுது ........... பிரியாணி கடையிலே திமுக திருடன் காசு கொடுக்காம பிரியாணி கிடைக்கலேன உடனே கடை முதலாளியை அடிச்சதுக்கப்புறம், தளபதி போய் கடைக்காரர்கிட்ட மன்னிப்பு கேட்டார்...... அதுக்கப்புறமும் திருடங்களோட அட்டூழியம் நிக்கலியே ......... beauty parlour, பக்கோடா/பஜ்ஜி கடை, அப்புறம் கடப்பை கல் திருட்டு ......... நடந்ததே ........ அப்போ திமுக கையாலாகாத கட்சியா?
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
05-ஆக-202019:00:24 IST Report Abuse
madhavan rajan போலீசார் திருந்தாவிட்டால் அரசு பொறுப்பு என்றால் திமுக கீழ்மட்ட ஊழியர்கள் செய்யும் அடாவடித்தனத்துக்கு திமுக தலைமை பொறுப்பேற்க வேண்டும். ஒப்புக்கொள்வாரா உதயநிதி? திமுக இளைஞரணியினர் யாராவது மோசமாக நடந்துகொண்டால் தெரிவியுங்கள். உதயநிதியை காய்ச்சி எடுத்துவிடலாம்.
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
05-ஆக-202017:33:58 IST Report Abuse
SAPERE AUDE அரசியல் அனுபவமில்லாத இந்த இளைஞரும் அரசியல் பேச ஆரம்பித்துவிட்டார். நம்நாட்டில் குடும்ப அரசியலை மக்கள் அறவே புறக்கணித்தால்தான் இந்த நோய் ஒழியும் ஐயா.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
05-ஆக-202017:45:03 IST Report Abuse
madhavan rajanதிமுக காரர்களுக்கு பிறரை திட்டுவதற்கு சொல்லியா தரவேண்டும். அவருடைய தாத்தா ராஜாஜி, பெரியார், இந்திரா, காமராஜர் மற்றும் பலரை சகட்டுமேனிக்கு தீட்டியவர். அன்னாருடைய பேரன் அதிமுகவினரை திட்டுவது ஆச்சரியமேயில்லை. தாட்த்தா திட்டவும் திட்டுவார், பிறகு காரியம் ஆக்கவேண்டுமென்றால் கட்டியும் அணைப்பார் காலிலும் விழுவார். இவரும் அதுபோலத்தான் இருப்பார் என்பது உறுதி....
Rate this:
Hari - chennai,இந்தியா
05-ஆக-202018:52:42 IST Report Abuse
Hariஇதுக்கெல்லாம் சொந்த மூளையா வேணும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X