பொது செய்தி

இந்தியா

இந்திய கலாசாரத்தின் அடையாளம் ராமர் கோவில்: பிரதமர்

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
அயோத்தி: இந்திய கலாசாரத்தின் நவீன சின்னமாக ராமர் கோவில் திகழும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: ராமர் மற்றும் சீதாதேவியை வணங்கி உரையை துவக்குகிறேன். இன்று இந்தியா முழுவதும் ஜெய் ராம் என்ற கோஷம் தான் கேட்கிறது. உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு வாழ்த்துகள். வரலாற்று சிறப்பு மிக்க
அயோத்தி, ராமர் கோயில், பிரதமர் மோடி,  ராமர், பிரதமர்

இந்த செய்தியை கேட்க

அயோத்தி: இந்திய கலாசாரத்தின் நவீன சின்னமாக ராமர் கோவில் திகழும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: ராமர் மற்றும் சீதாதேவியை வணங்கி உரையை துவக்குகிறேன். இன்று இந்தியா முழுவதும் ஜெய் ராம் என்ற கோஷம் தான் கேட்கிறது. உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு வாழ்த்துகள். வரலாற்று சிறப்பு மிக்க இந்த நாளில் எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சரயு நதிக்கரையில் வரலாற்று சிறப்பு மிக்க தருணம் நிறைவேறியுள்ளது.

உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன. இந்த தருணம் வரும் என கோடிக்கணக்கான மக்கள் நம்பவில்லை. பல வருட காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்துள்ளது. குழந்தை ராமர் பல ஆண்டுகளாக குடிசையில் வைக்கப்பட்டிருந்தார். ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற பலரது கனவு இன்று நிறைவேறியுள்ளது. கோவிலுக்காக பல தலைமுறையினர் தியாகம் செய்துள்ளனர். பலர், தங்களது உயிரை தியாகம் செய்து ராமர் கோவிலுக்காக போராடியுள்ளனர். அவர்களுக்கு 120 கோடி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.


latest tamil news
ஆக., 15 லட்சக்கணக்கான இந்தியர்களின் தியாகத்தை குறிக்கிறது. அதேபோல், ராமர் கோவிலுக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் போராடியுள்ளனர். ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது. பெரு மகிழ்ச்சியுடன் இன்றைய நிகழ்ச்சியை மக்கள் பார்த்து கொண்டுள்ளனர். ராமர், தினமும் நமக்கு முன்மாதிரியாக உள்ளார்.

ராமரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. குமரி முதல் நாடு முழுவதும் ராமர் கீதம் ஒலிக்கிறது. தங்கமயமான அத்தியமான துவங்கியுள்ளது. நமது கலாசாரத்தின் நவீன சின்னமாக ராமர் கோயில் திகழும் ராமர் கோவில் பல வாய்ப்புகளை அளித்துள்ளது. ராமர் பாலத்திற்கு கற்கள் வந்தது போல், ராமர் கோவில் கட்டவும் மணல், செங்கல், புனித நீர் வந்துள்ளது.உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைதது தரப்பு மக்களும் அமைதி காத்தது பெருமைக்குரிய விஷயம். வேற்றுமையில் ஒற்றுமையை ராமர் கோயில் எடுத்து காட்டுகிறது.


கம்பராமாயணம்கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, நடந்த இந்த விழா மற்ற விழாக்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. தமிழில் கம்ப ராமாயணம் போன்று, பல்வேறு மொழிகளிலும் ராமாயணம் உள்ளது. சுதந்திர போராட்டத்திற்கு மஹாத்மா காந்திக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தது போல், தற்போது, ராமர் கோவிலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளர். ராமரை பல்வேறு நாடுகளிலும் வழிபடுகின்றனர். தாய்லாந்து, மலேஷியா, லாவோஸ் நாடுகளிலும் ராமரை வழிபடுகின்றனர். முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேஷியாவிலும் ராமாயணம் உள்ளது. ராமர் கோயில் கட்டுவது நாட்டு மக்களை ஒற்றுமைபடுத்தும் செயல்.

ராமாயணம் பற்றி அறிந்த மக்கள், கடவுள் ராமருக்கு கோவில் கட்டுவதை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். கடவுள் ராமரின் போதனைகள் உலகளவில் பின்பற்றப்படுகின்றன. மஹாத்மா காந்தியின் கனவாக, ராமராஜ்யம் இருந்தது. நேபாளத்திற்கும், கடவுள் ராமருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவரின் கொள்கைகள், நமது நாட்டை பல ஆண்டுகளாக வழிநடத்தி வருகிறது. உலகம் முழுவதும் பக்தர்கள் வர உள்ளதால், அயோத்தி வளர்ச்சி அடைய உள்ளது. ராமர் கோவில், ஒற்றுமைக்கு அடையாளமாக திகழும். சத்தியத்தின் வழியில் நாம் நடக்க வேண்டும் என்பதை நமக்கு எடுத்து காட்டியுள்ளார். எல்லா இடத்திலும் கடவுள் ராமர் உள்ளார். அவர் அனைவருக்கும் சொந்தமானவர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-ஆக-202012:13:06 IST Report Abuse
Malick Raja இதையே தானையா சொல்லிக்கினே கீறுங்க .. கொரோனா வேறே போமாட்டேங்குது .. எதையாவது செஞ்சி கொரோனாவை ஒட்டுங்கப்பா ..
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
05-ஆக-202022:48:49 IST Report Abuse
venkatan காந்திஜியின் கனவும் கிராம ராஜ்யமே ராமராஜ்யம் என்று இருந்தது.இந்த நன் நாளில் கிராமங்களின் ஆட்சியில் நமது உணவுக்காக உழைக்கும் உழவர்கள் கைவினைஞர்கள்,போன்றோராது வாழ்வு சிறக்க நம் பாரதப் பிரதமருக்கு ஸ்ரீ ராமபிரான் நல்ல ஆயுளையும் ஆரோக்கியத்தையும்,இதுபோல உலக மக்கள் அனைவருக்கும் அருளட்டும்."ஸர்வ சமஸ்தாஸ் ஸு கினோ பவந்து"🔯🙏🌸💮
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
05-ஆக-202020:02:23 IST Report Abuse
அறவோன் "பெருமாளு..., கட்டிட வேலை ஆரமிச்சிடிச்சி , இனிமேல் வழக்கம் போல நேரு, அவருடைய தாத்தா மேல் பழியை சுமத்த முடியாது, விளங்கிச்சா?"
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X