அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,விலிருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்: ஸ்டாலின்

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (75)
Share
Advertisement
DMK,  MK Stalin,Stalin, Suspends, Selvam, membership, chennai, tamil nadu, தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்,ஸ்டாலின்,selvam,கு.க.செல்வம்

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வத்தை, தி.மு.க.,விலிருந்து சஸ்பெண்ட் செய்து, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னை மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலர், ஜெ.அன்பழகன் மறைவுக்கு பின், அவர் வகித்த பதவியை, மூத்த நிர்வாகிகள், 10க்கும் மேற்பட்டவர்கள் எதிர்பார்த்தனர். அவர்களில் ஒருவர், தி.மு.க., தலைமை நிலைய செயலரும், ஆயிரம் விளக்கு தொகுதியின், எம்.எல்.ஏ.,வுமான கு.க.செல்வம். ஆனால், கட்சியில், தனக்கு ஜூனியரான சிற்றரசுவை, உதயநிதி, மகேஷ் பொய்யாமொழி பரிந்துரை காரணமாக, மாவட்ட செயலராக நியமித்ததை, கு.க.செல்வத்தால் ஜீரணிக்க முடியவில்லை. இந்நிலையில், டில்லியில், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, அக்கட்சியில் சேரும் விருப்பத்தை, கு.க.செல்வம் தெரிவித்து உள்ளார். ஆனால், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., ஒருவர், கட்சி மாறினால், பதவி பறிபோகும் என்பதால், இணைப்பு அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.


latest tamil news


டில்லியில் நட்டாவை சந்தித்த பின்னர் கு.க.செல்வம் கூறுகையில், ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும், பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுகிறேன். என் தொகுதிக்கு உட்பட்ட, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மேலும் ஒரு, 'லிப்ட்' அமைத்து தரும்படி, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்து கேட்க, டில்லி வந்தேன். கந்தசஷ்டி கவசத்தை இழிவாக பேசியவர்களை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். உட்கட்சி தேர்தலை நடத்த, அவர் முன்வர வேண்டும்.பா.ஜ.,வில் நான் இணையவில்லை. இருப்பினும், பா.ஜ., தலைவர் நட்டாவை சந்தித்ததற்காக, என் மீது தி.மு.க., தலைமை நடவடிக்கை எடுத்தால், அதை சந்திக்க தயார்.இவ்வாறு, அவர் கூறினார்.

இந்நிலையில், கு.க.செல்வத்தை, தி.மு.க.,விலிருந்து சஸ்பெண்ட் செய்து ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தலைமை நிலைய செயலாளர், செயற்குழு உறுப்பினர் பதவிகளும், கு.க.செல்வத்திடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.


கவலையில்லை


இந்நிலையில், கு.க.செல்வம் இன்று, சென்னையில் உள்ள தமிழக பா.ஜ., அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மோடி, நட்டா மற்றும் முருகன் ஆகியோருக்கு நன்றி. நான் எம்.எல்.ஏ., என்ற முறையில், அவர்களிடம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு லிப்ட் வசதி கேட்டேன். திமுக உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். கடவுள் முருகனை பற்றி தவறாக பேசியவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். கட்சியை விட்டு நீக்கினாலும் எஎனக்கு கவலையில்லை. தமிழகத்தில் வாரிசு அரசியல் மாறி குடும்ப அரசியல் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர் வி.பி.துரைசாமி கூறுகையில், கு.க.செல்வம் பா.ஜ.,வில் இணையவில்லை. இந்தியாவில், காங்கிரஸ் என்ற குடும்ப கட்சியை பா.ஜ., எதிர்க்கிறதோ, அதேபோன்று, தமிழகத்தில், திமுக குடும்ப கட்சியை தமிழக பா.ஜ., எதிர்க்கும். திமுக அதிருப்தியாளர்கள் பா.ஜ.,விற்கு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aashik - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஆக-202013:28:44 IST Report Abuse
aashik இனி கு க செல்வம் காலி ..கண்டிப்பாக இவர் ஜெயிக்கவே முடியாது
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-ஆக-202010:27:10 IST Report Abuse
Malick Raja திமுகவிலிருந்து ஒரு MLA.. அல்ல 100.MLA.க்களே பிஜேபியில் சேர்ந்தாலும் அந்த கட்சி தேர்தலில் தனித்து 1.MLA. சீட்டைக்கூட வெல்லமுடியாது.. அந்த அளவுக்கு மிகவும் பலம் பொருந்திய கட்சியாக தமிழகத்தில் திகழ்கிறது என்பதை மறுக்கவே முடியாது .. கடந்தகால தேர்தல்கள் இதற்க்கு உதாரணமாக இருக்கிறது
Rate this:
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
06-ஆக-202013:35:34 IST Report Abuse
மூல பத்திரம் பரவாயில்லை, திமுக வுக்கு சோம்பு தூக்கும் ஆட்கள் எதிர்க்கும் ஒரே கட்சி நீங்கள் கூறும் அந்த பலமில்லாத கட்சி. அந்த பயம் இருக்கட்டும். பயம் இல்லையென்றால் அதிமுக எதிர்ப்பை முன்னிறுத்தி அரசியல் செய்யுங்கள்...
Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
06-ஆக-202013:39:42 IST Report Abuse
TamilArasanஇன்று பிரமாண்டமாக வளர்ந்து நிற்கும் இதே BJP வெறும் இரண்டு MP தொகுதிகளை தான் 1984 பாராளுமன்ற தேர்தலில் பெற்றது என்பதை நினைவு கொள்ளவும் - தமிழகத்தில் இருக்கும் இரு திராவிட கட்சிகள் செய்துவரும் இந்து விரோத அரசியல் மற்றும் சிறுபாண்மை தாஜா அரசியல் BJP யை தானாக வளர்த்து விடும்......
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
06-ஆக-202007:54:55 IST Report Abuse
Sampath Kumar வரவேண்டியது வந்து விட்டது பொய் சேரவேண்டிய இடத்துக்கு வந்தாச்சு அப்புறம் என்ன ? ஜென்ம சபாலியம் அதனித்து விட்டார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X