எல்லை பிரச்னை இந்திய - சீன உறவில் ஆதிக்கம் செலுத்தாது: சீன தூதர்

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Border Dispute, Dominate, China, India, us, Chinese Envoy, Chinese Ambassador, எல்லை பிரச்னை, சீனா, இந்தியா, சீன தூதர்

வாஷிங்டன்: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை தகராறு, இரு நாட்டு உறவுகளில் ஆதிக்கம் செலுத்தாது என்று எண்ணுவதாக அமெரிக்காவுக்கான சீன தூதர் கூறியுள்ளார்.

இந்திய - சீனா இடையேயான எல்லை பிரச்னை, கடந்த ஜூன் மாதம் மோதலாக உருவெடுத்தது. கடந்த ஜூன் மாதம் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கின் இந்திய பகுதிக்குள் சீன வீரர்கள் நுழைய முயன்ற போது, அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதில் ஏற்பட்ட மொதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.


latest tamil news
இந்த மோதலுக்கு பின் இரு நாட்டு உறவுகள் மோசமடைந்துள்ளன. சீன நிறுவனத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன பொருட்கள் இறக்குமதிக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவில் ஆஸ்பென் பாதுகாப்பு மன்ற விவாதத்தில் அந்நாட்டுக்கான சீன தூதர் குய் தியான்கய் பங்கேற்று பேசினார். எல்லை பிரச்னை சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்திய நண்பர்களின் பார்வையும் இது தானா என்பது எனக்கு தெரியாது. இவ்வாறு கூறினார்.


latest tamil newsமற்றொரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், எந்த சீன நிறுவனமும், சீன அரசாங்கத்திற்கு தகவல்களை அளித்ததாக ஆதாரம் இல்லை. இக்குற்றச்சாட்டை கூறும் நபர்கள் ஆதாரத்தை காட்டுவதில்லை. ஒரு புதிய பனிப்போர் யாருடைய நலனுக்கும் உதவாது. நாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். வரலாறு மீண்டும் திரும்ப அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
06-ஆக-202017:18:15 IST Report Abuse
மூல பத்திரம் அதாவது இவர்களிடம் ஒப்பந்தம் கையெழுத்து போட்ட நண்பர்களை பற்றி பேசுகிறார் என்று நினைக்கிறேன்
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
05-ஆக-202021:21:08 IST Report Abuse
Nallavan Nallavan எல்லை பிரச்னையை இந்தியர்கள் பெரிது படுத்தக் கூடாது என்பதுதான் அவன் சொல்ல வந்தது
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
05-ஆக-202020:37:23 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga ஐயா சீன (துரோகி) தூதரே, அதெல்லாம் உடு. இந்த படைகளை லடாக் பகுதியில் இருந்து வாபஸ் ஆகுமா ஆகாதா? தூதர் : ஓ அதுவா, ஆகும் ஆனா ஆகாது. இந்தியா : இதுமாதிரி தான் ஒங்க தாத்தா சூ என் லாய் சொல்லிட்டு படை எடுத்து சண்டை போட்டான். தூதர் : பரவாயில்லீங்க. அது ஒரு பக்கம் நடக்கட்டும். அதுக்காக ஏங்க சண்டைக்கும் வியாபாரத்துக்கும் முடிச்சு போடறீங்க? டிக் டாக் அப்பறம் ஹுவெய் இதுக்கெல்லாம் இந்தியாவுல அனுமதி குடுங்க ப்ளீஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X