பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் உயிரிழந்தது இலங்கை தாதாவா? டி.என்.ஏ., பரிசோதனை செய்ய திட்டம்

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோவை: கோவையில் உயிரிழந்தது இலங்கை தாதா தானா என்பதை உறுதி செய்ய, டி.என்.ஏ., பரிசோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டுள்ளனர்.



latest tamil news




கோவையில் உயிரிழந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்தது அங்கோடா லொக்கா தான் என, உறுதிபடுத்த உயிரிழந்த நபரின் உடல் உறுப்புகளை டி.என்.ஏ., ஆய்விற்கு உட்படுத்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


latest tamil news



அங்கோடா லொக்காவின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிரேத பரிசோதனையின் போது 'விஸ்ரா' எனும் உடல் பாகங்கள் பதப்படுத்தப்படும். அதில், சிறிய அளவிலான குடல், வயிற்று பாகங்கள், கல்லீரல், சிறுநீரகம் இருக்கும். அவற்றை, கோவையில் உள்ள மண்டல தடயவியல் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைப்பர். அவ்வாறு அனுப்பப்பட்ட அங்கோடா லொக்காவின் உடல் பாகங்களை டி.என்.ஏ., ஆய்வுக்கு உட்படுத்தவுள்ளனர். அந்த டி.என்.ஏ., முடிவுகளை அங்கொட லொக்காவின் உறவினர்களின் டி.என்.ஏ.,வுடன் ஒப்பிட்டு பார்த்து அவரது உயிரிழப்பை உறுதி செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kamal -  ( Posted via: Dinamalar Android App )
05-ஆக-202020:29:18 IST Report Abuse
kamal போங்கடா வேலையத்தவங்கலா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X