பெய்ரூட் வெடி விபத்தில் 135 பேர் பலி, 3 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்: கவர்னர் அறிவிப்பு

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

பெய்ரூட்: நேற்றிரவு லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 135 பேர் பலியாகி உள்ளனர். 5,000 பேர் காயம் அடைந்தனர். மேலும் 3 லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்ததாக பெய்ரூட் கவர்னர் மார்வான் அப்போத் தெரிவித்தார்.latest tamil newsலெபனான் அதிபர் மைக்கேல் அவோன் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு புதன் கிழமை (ஆக.,05) ஏற்பாடு செய்தார். நாட்டில் 2 வார காலத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பெய்ரூட் துறைமுக கிடங்கில் நடந்த வெடி விபத்தில் 2,750 டன்கள் அளவுக்கு அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததால் லெபனானில் நடந்த போர்களை விட அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் 135 பேர் பலியாகி உள்ளனர். 5000 பேருக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சேதங்களில் பெய்ரூட் மீண்டு வர பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

லெபனானில் நீண்ட காலமாக அமைதியின்மை நிலவுகிறது. அண்டை நாடுகளான சிரியா மற்றும் இஸ்ரேல் இதற்கு காரணமாக உள்ளன. 1985 முதல்2000 வரை லெபனானில் ஏற்பட்ட போர், 2007, ஜூலை மாதம் நடந்த போர், 2007-08 இடையில் ஏற்பட்ட கலவரம் என தொடர்ச்சியாக பல்வேறு சோதனை காலகட்டங்களை அந்நாடு சந்தித்தது. கடந்த சில வருடங்களாக மட்டும் அந்த நாட்டில் அமைதி நிலவி வந்தது. ஆனால், 50 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த போரில் ஏற்படாத துயரம் ஒரேயொரு வெடி விபத்தால் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நகரமே 40 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெய்ரூடர் கவனர் மார்வன் அப்போத் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இது வரை 3 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளார்கள். சேத மதிப்பு 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார். பிரதமர் ஹஸ்ஸான் தியாப், 'அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிடம், உணவு போன்றவற்றை வழங்க பணியாற்றி வருகிறார்கள். வெடி விபத்து சம்பவத்தால் புதன்கிழமை நாடு முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான் பெய்ரூட் செல்ல உள்ளார். இரு விமானங்களில் பிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த மீட்புப்படையினரும் பெய்ரூட் செல்ல உள்ளனர். முன்னதாக பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசிய மேக்ரான், ' லெபனான் அரசியல் தலைவர்களை சந்திக்க உள்ளேன். லெபனான் பிரான்ஸ் நாட்டுடன் பொருளாதார ரீதியாக நீண்டகால நட்பு நாடாக உள்ளது.' இவ்வாறு தெரிவித்தார்


latest tamil newsஇந்நிலையில் ஐரோப்பிய கமிஷன் 100க்கும் மேற்பட்டவர்கள் தீயணைப்பு படையினரை மீட்புபணிக்காக அனுப்ப உள்ளது. செக் குடியரசு, , ஜெர்மனி, கிரீஸ், போலந்து, நெதர்லேண்ட் போன்ற நாடுகளும் இருந்தும் பெய்ரூட் சம்பவத்தில் பாதிப்பு அடைந்தவர்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளன.


Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
06-ஆக-202012:00:11 IST Report Abuse
Rafi உலக வாழ்க்கை கொஞ்சமே, நிலையான வாழ்க்கையில் அப்பாவியான பாதிக்கப்பட்ட மக்களின் கேள்விக்கு பதில் அளிக்க இந்த குற்றவாளிகளினால் முடியுமா, யாருக்காக செய்திருந்தாலும், மேலும் அதற்கு துணையாக இருந்தவர்களுக்கு கிடைக்கும் தண்டனையோ மிக கடுமை, தீர்ப்பு சரியாக வழங்கப்படும், ஒதுங்க, ஒளியவோ இடம் கிடைக்காது, மேலும் மரணத்தை கேட்டுக் கொண்டே இருப்பார்கள், அது கிடைக்கப்போவதில்லை. அதிகாரம் அனைத்தும் பிரபஞ்சத்தை படைத்து பாதுகாப்பவனிடம் மட்டுமே.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
06-ஆக-202005:54:28 IST Report Abuse
 Muruga Vel இஸ்ரேல் குளறுபடி ஏதாவது இருந்ததா ..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
06-ஆக-202000:49:12 IST Report Abuse
தல புராணம் ஐரோப்பிய கமிஷன் 100க்கும் மேற்பட்டவர்கள் தீயணைப்பு படையினரை மீட்புபணிக்காக அனுப்ப உள்ளது. செக் குடியரசு, , ஜெர்மனி, கிரீஸ், போலந்து, நெதர்லேண்ட் போன்ற நாடுகளும் இருந்தும் பெய்ரூட் சம்பவத்தில் பாதிப்பு அடைந்தவர்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளன - மனிதாபிமானமுள்ள நாடுகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X