பொது செய்தி

இந்தியா

ஆந்திராவில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்படும்

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

அமராவதி : ஆந்திராவில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.latest tamil newsஇந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவது குறித்து அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. ஆந்திராவிலும் கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வந்தாலும், மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. கொரோனா நோயாளிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மாநில அரசால் சிறப்பாக எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆந்திராவில் விரைவில் பள்ளிகள் துவங்கவுள்ளதால் , கல்வி பயிலும் மாணவ , மாணவியர்களுக்காக அரசு சில முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

அதன்படி, ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மாநிலத்தில் பள்ளி செல்லும் சுமார் 39 லட்சம் குழந்தைகளுக்கு ( பள்ளி செல்லும் ) தேவையான ஜெகனன்ணா வித்யா கனுகா திட்டத்தின் கீழ் , அவர்களுக்கான புத்தகங்கள், சீருடைகள், புத்தகபை, எழுது பொருட்கள் மற்றும் பிற கல்வி உபகரணங்கள் வழங்கப்படுவதாக முதல்வர் அலுவலகத்தின் அறிக்கை இன்று தெரிவித்தது. ஆந்திர மாநிலத்தில் கல்வி செயல்பாடு மற்றும் இயக்கம் குறித்த அரசின் 'மன பாடி நேடு நேடு' [ Mana Badi Nedu Nedu scheme ] திட்டத்தின் முதல் கட்டத்தின் (Phase 1) கீழ் 15,715 பள்ளிகளின் மறுசீரமைப்பின் கீழ் வருகிறது.


latest tamil newsஇது தொடர்பாக மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தனது ததே பள்ளி அலுவலகத்தில் மறுஆய்வு செய்தார். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் மினரல் வாட்டர் (சுத்தமான குடிநீர்) வழங்கப்பட வேண்டும். இது அவசியமானது. மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவது தொடர்பாக ஆலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உபகரணங்களில் எந்தவிதமான சமரசமும் இருக்கக்கூடாது, சரியான சுகாதாரத்தை பராமரிப்பதே முதன்மையானதாக இருக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

மாநிலத்தில் மீதமுள்ள 31,073 கல்வி நிறுவனங்களில் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான 2 வது மற்றும் 3 வது கட்டங்கள் குறித்து முதல்வருக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர். மேலும் அதற்கான செலவு 7,700 கோடி எனவும் மதிப்பிடப்பட்டது. ஆக., 31 க்குள் 14,585 கல்வி நிறுவனங்களுடனான 2 வது கட்டம் அடையாளம் காணப்படும், மூன்றாம்கட்டத்தில் 2021 ஜூன் 30 தேதிக்குள் சுமார் 16,489 கல்வி நிறுவனங்கள் அடையாளம் காணப்படும். 2021 நவ., 14 ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
06-ஆக-202006:44:14 IST Report Abuse
NicoleThomson இந்த மினரல் வாட்டர் கலாச்சாரம் கருநாடகத்தில் அதிகரித்துள்ளது , இதனால் வேஸ்ட்டாகும் தண்ணீரை யாரும் கணக்கில் கொள்வதே இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X