சவுதியில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 1,626 பேர் மீட்பு

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020
Share
Advertisement

ரியாத் : சவுதியில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,626 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சவுதி அரேபியாவில் நோய் பாதிப்பு அதிகரித்து ஒரே நாளில் 1,389 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 2,82,824 ஆக அதிகரித்தது கொரோனாவால் நேற்று புதிதாக 36 பேர் பலியாகினர். சவுதியில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,020 ஆக உயர்ந்தது.


latest tamil news



சவுதியில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 1,626 பேர் புதிதாக மீட்கப்பட்டுள்ளனர். இது மொத்த மீட்டெடுப்புகளை 2,45,314 ஆக உயர்த்தியுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் 1,991 பேர் உட்பட தற்போது மருத்துவ சிகிச்சையில் 34,490 பேர் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 36,666 க்கும் மேற்பட்ட பிசிஆர் சோதனைகளை (PCR Test) நடத்தியது. அதன்பின் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X