பொது செய்தி

இந்தியா

சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் ரத்து

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
china, firm, tender, smart meter, 20 lacs, tender, cancel, சீன நிறுவனம், 20 லட்சம், ஸ்மார்ட் மீட்டர், டெண்டர், ரத்து, மத்திய அரசு

புதுடில்லி: 20 லட்சம் ஸ்மார்ட் மீட்டர் தயாரித்து வழங்குவதற்காக சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டெண்டர் ஒன்றை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

சீனாவை தலைமையிடமாகக் கொண்டு இந்தோனேஷியாவில் இயங்கி வரும் நிறுவனம் பிடி ஹெக்சிங். இந்நிறுவனத்திற்கு ஸ்மார்ட் மீட்டர் தயாரிக்க வழங்கப்பட்டஒப்பந்தம் ரத்தானது. இந்தியாவில் ஸ்மார்ட் மீட்டர் தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை அந்நிறுவனம் பூர்த்தி செய்யாததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசின் எனர்ஜி எபிசியன்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் தெரிவித்தது.

2022 ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து மின்சார மீட்டர்களையும் ஸ்மார்ட் பெய்டு மீட்டராக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி மேற்சொல்லப்பட்ட நிறுவனத்திடம் 20 லட்சம் ஸ்மார்ட் மீட்டருக்கான ஒப்பந்தம் பெறப்பட்டது.

ஆனால், லடாக் எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்த மோதலில் நம் வீரர்கள் 20க்கும் மேற்பட்டோர் வீரமரணம் அடைந்தனர். 35 பேர் சீன தரப்பிலும் கொல்லப்பட்டனர்.


latest tamil news


இதையடுத்து சீனாவுக்கு எதிரானா பொருளாதார நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியது. அந்நாட்டின் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. மேலும் மின்சார சாதனங்கள், டி.வி., இறக்குமதி போன்றவற்றிற்கும் கட்டுப்பாடுகள் மற்றும் தடை விதிக்கப் பட்டது. அதன் ஒரு பகுதியாக தற்போது சீன நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட டெண்டர் ரத்தாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
06-ஆக-202008:25:18 IST Report Abuse
Bhaskaran சென்னை அம்பத்தூரில் மீட்டர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுள்ளது உள்நாட்டு தயாரிப்புகளுக்கு ஆர்டர் வழங்காமல் தரமற்ற cheena தயாரிப்புகளுக்கு எதற்கு ஆதரவளிக்கின்றனர் .உள்குத்து இருக்கலாம்
Rate this:
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
06-ஆக-202008:22:18 IST Report Abuse
Mohandhas சுமார்ட் மீட்டர் கூட நம்மால செய்ய முடியாதா?
Rate this:
K.ANBARASAN - muscat,ஓமன்
06-ஆக-202009:07:50 IST Report Abuse
K.ANBARASAN நல்ல கேள்வி....
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
06-ஆக-202008:21:48 IST Report Abuse
Bhaskaran தமிழ்நாட்டில் மீட்டர் செய்யும் நிறுவனங்கள் இல்லையா திருச்சி யில் உள்ள நிறுவனத்துக்கு ஆர்டர் கொடுக்கலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X