பலாத்கார வழக்கிலிருந்து பிஷப்பை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
SC dismisses discharge, plea  rape accused, Bishop Franco Mulakkal

புதுடில்லி: பாலியல் பலாத்கார வழக்கிலிருந்து கேரள பிஷப்பை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.

கேரளாவில், கோட்டயம் அருகே குருவிளங்காடு தேவாலயத்தில் பிஷப்பாக இருந்தவர், பிராங்கோ மூலக்கல், 55. குருவிளங்காடு தேவாலயத்தில் பணியாற்றிய காலத்தில், கன்னியாஸ்திரி ஒருவரை, பிராங்கோ மூலக்கல் மிரட்டி, பலமுறை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

பாதிக்கப் பட்ட கன்னியாஸ்திரி, குருவிளங்காடு போலீசில் புகார் செய்தார். பிரச்னை பெரிதானதையடுத்து, கோட்டயம் போலீசார் 2018-ல் கைது செய்து 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், மூலக்கல்லுக்கு, கேரள உயர் நீதிமன்றம், நிபந்தனை ஜாமின் வழங்கியது.


latest tamil news




தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில், உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தன் மீது கன்னியாஸ்திரி பணம் பறிக்கும் நோக்குடன் பொய்யான புகார் கூறியுள்ளார். நான் நிரபராதி என் மீதான வழக்குகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே, போலீசாரின் விசாரணை அறிக்கையில் பிஷப்பிற்கு எதிரான ஆதாரம் வலுவாக இருப்பதால் விடுவிக்க மறுத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
07-ஆக-202011:19:09 IST Report Abuse
skv srinivasankrishnaveni பொள்ளாச்சிக்கேசு எண்ணாக ஆச்சு
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
06-ஆக-202018:54:25 IST Report Abuse
Tamilnesan இதுவே இந்து சாமியாராக இருக்கட்டும்.......அணைத்து தொலைக்காட்சிகளிலும் விவாதம் என்கிற பெயரில் உடனடி தீர்ப்பு வழங்கி இந்து சாமியாரை தூக்கில் ஏற்றி இருப்பார்கள்.
Rate this:
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
06-ஆக-202017:03:45 IST Report Abuse
Subramanian Arunachalam வழக்கில் இருந்து பிஷப்பை விடுவிக்க முடியாது . அதே சமயம் இவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று தீர்ப்பை தெளிவாக ஒரு நாளும் சொல்லப்போவதில்லை . இவருக்கு புனிதர் பட்டம் நிச்சயம் உண்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X