பஞ்சாப்பின் கொரோனா நோயாளிகளில் 47 சதவீதம் 21 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள்

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020
Share
Advertisement

சண்டிகர் : பஞ்சாப்பில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 47 சதவீதத்தினர் 21 முதல் 40 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news




இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பஞ்சாப்பில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் நோய் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் 21 முதல் 40 வயதுடைய நபர்கள். இந்திய மருத்துவ கவுன்சில், (RT-PCR ) சோதனையில் 4,724 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மொத்த தொற்றுநோய் விகிதத்தில் 25 சதவிதமாகும். பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் 21 முதல் 30 வயதுடையவர்கள். அத்துடன் 31 முதல் 40 வயதுடையவர் களில் 4,129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இது மாநிலத்தின் மொத்த பாதிப்புகளில் 22 சதவீதமாகும்.

சண்டிகரை மையமாக கொண்ட கிராம மற்றும் தொழில்துறை மேம்பாட்டு மையத்தின் பொருளாதார நிபுணர் அஸ்வினி குமார் நந்தா கூறுகையில், மாநிலத்தில் 21 முதல் 40 வயதுடைய நபர்கள் கொரோனா தொற்றுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டனர். இது கிராமப்புற அல்லது நகர்ப்புறங்களாக இருந்தாலும், அவை தொற்றுநோயைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். தொழில்நுட்ப குழுவின் அறிக்கையின்படி, 2021 ல் 20 முதல் 40 வயதிற்கு குறைவானவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 35.3 சதவீதத்தை உருவாக்கும். 2011 ஆம் ஆண்டில், 20 முதல் 39 வயதுக்குட்பட்ட நபர்களின் சதவீதம் 33.6 சதவீதமாகவும், 2016 ல் இது 34.7 சதவீதமாகவும் இருந்தது என கூறினார்.


latest tamil news




2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில், பஞ்சாபின் மொத்த மக்கள் தொகை 2.77 கோடியாக இருந்தது, இது தொழில்நுட்ப குழுவின் அறிக்கையின்படி 2016 இல் 2.91 கோடியாகவும், 2021 இல் 30.3 கோடியாகவும், 2026 இல் 3.13 கோடியாகவும், 2031 இல் 3.2 கோடியாகவும், 2036 இல் 3.26 கோடியாகவும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ அறிவியல கழகம் (ICMR) தரவுகளின்படி, 41 முதல் 50 வயதிற்குட்பட்ட 3,066 பேருக்கு (16 சதவீதம்), 51 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்களில் 2,691 பேர் ( 14 சதவீதம் ) , 11 முதல் 20 வயதுக்குட்பட்ட நோயாளிகளில் 1,527 பேர் ( 8 சதவீதம் ) , 61 முதல் 70 வயதுக்குட்பட்ட நோயாளிகளில் 1,380 பேர் ( 7 சதவீதம் ) ஆகவும், 0 முதல் 10 வயதுக்குட்பட்டவர்களில் 750 பேர் ( 4 சதவீதம் ), 71 முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்களில் 473 பேர் ( 3 சதவீதம் ) மற்றும் 81 முதல் 90 வயதுக்குட்பட்டவர்களில் 103 பேர் ( 1 சதவீதம் ) நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X