பொது செய்தி

இந்தியா

கொரோனா பரவல் 12.82 லட்சம் பேர் மீட்பு

Added : ஆக 05, 2020
Share
Advertisement

புதுடில்லி; கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, நேற்று வரை, 12.82 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர் என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:நாடு முழுதும், 2.15 கோடி பேரிடம், கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த, 24 மணி நேரத்தில், 6.20 லட்சம் பேரிடம் பரிசோதனை நடத்தியதில், 52 ஆயிரத்து, 509 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 19.08 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை, 18 லட்சத்தில் இருந்து, இரண்டே நாட்களில், 19 லட்சத்தை கடந்துள்ளது.பாதிக்கப்பட்டவர்களில், 12.82 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதனால், தொற்றிலிருந்து மீண்டோர் விகிதம், 67.19 ஆக உயர்ந்துள்ளது; இறப்பு, 2.09 சதவீதமாக குறைந்துள்ளது.

மஹா.,வில், 300 பேர், கர்நாடகாவில், 110; தமிழகத்தில், 108; ஆந்திராவில், 67; மே., வங்கத்தில், 54; உ.பி.,யில், 39; குஜராத்தில், 25 பேர் என, வைரஸ் பாதிப்பிற்குள்ளான, 857 பேர், நேற்று இறந்துள்ளனர்.இதையடுத்து, இறந்தோர் எண்ணிக்கை, 39 ஆயிரத்து, 795 ஆக, உயர்ந்துள்ளது. இதில், 16 ஆயிரத்து, 142 பேருடன், மஹா., முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில், 4,349; டில்லியில், 4,033; கர்நாடகாவில், 2,704; குஜராத்தில், 2,533; உ.பி.,யில், 1,817; மே., வங்கத்தில், 1,785 பேர் இதுவரை இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X