பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்...

Added : ஆக 05, 2020
Share
Advertisement

பெண் நக்சல் சுட்டுக்கொலை

ராய்பூர்: சத்தீஸ்கரின் இசுல்நார் கிராமத்தில், நக்சல்கள் பதுங்கியிருந்த பகுதியை, நேற்று காலை, பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சுற்றி வளைத்தனர். நக்சல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால், பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். இதில், பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் பயன்படுத்திய துப்பாக்கியை, போலீசார் கைப்பற்றினர்.

சுவர் இடிந்து 5 தொழிலாளர்கள் பலி

சில்வாசா: தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில், சில்வாசா நகரின் அருகே சுரங்கி கிராமத்தில், புதிய தொழிற்சாலை கட்டுமான பணிகள் நடக்கின்றன.இதில் பணியாற்றும் தொழிலாளர்கள், புதிதாக கட்டிய சுற்றுச்சுவர் அருகே, தற்காலிக தங்குமிடத்தில், நேற்று முன்தினம் இரவு உறங்கினர். பலத்த மழையால், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, ஐந்து தொழிலாளர்கள் பலியாயினர்; இருவர் காயமடைந்தனர்.

ம.பி., முதல்வர் குணமடைந்தார்

போபால்: ம.பி., முதல்வர், சிவராஜ் சிங் சவுகான், 61, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஜூலை, 25ம் தேதி, போபாலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, பாதிப்பில் இருந்து குணமடைந்த அவர், நேற்று வீடு திரும்பினார். முதல்வர், ஒரு வாரம் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

காஷ்மீரில் பா.ஜ., கொண்டாட்டம்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு நீக்கப்பட்டதன் முதலாம் ஆண்டு விழாவை, ஸ்ரீநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில், தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி, பா.ஜ., தரப்பில் கொண்டாடினர். இது குறித்து, பா.ஜ., தலைவர் அல்தாப் தாக்குர் கூறும்போது, ''சிறப்பு அந்தஸ்து நீக்கம், காஷ்மீர் மக்களுக்கு, பல்வேறு நலன்களை வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்கள், ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள்,'' என்றார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டம் ரத்து

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக, அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு, தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இதற்கிடையே, அதிகாரிகள் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, கூட்டம் நடைபெறவில்லை என, கட்சி நிர்வாகிகள் கூறினர்.

கர்நாடக எம்.எல்.ஏ., மரணம்

பெங்களூரு: கர்நாடகாவின் துமகுரு மாவட்டம், சிரா சட்டசபை தொகுதியில் இருந்து, மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில், எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சத்யநாராயணா, 69. இவர், நீண்ட நாட்களாக, கல்லீரல் பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்தார். பெங்களூருவில், மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X