பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை மேட்டூர் நீர்மட்டம் உயர வாய்ப்பு

Added : ஆக 05, 2020
Share
Advertisement

மேட்டூர்; கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து, நீர்வரத்து அதிகரித்ததால், கபினி அணையில் இருந்து வினாடிக்கு, 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

கபினி அணையின் மொத்த நீர்மட்டம், 65 அடி. கொள்ளளவு, 19.5 டி.எம்.சி., கர்நாடகா - கேரளா எல்லையிலுள்ள, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், நேற்று முன்தினம், 10 ஆயிரத்து, 500 கன அடியாக இருந்த, கபினி நீர்வரத்து, நேற்று, 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அதற்கேற்ப, அணை நீர் இருப்பு, 17 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி, நேற்று முன்தினம் காலை, 10 ஆயிரத்து, 500 கன அடியாக இருந்த கபினி நீர் திறப்பு, இரவில், 32 ஆயிரம் கன அடி, நேற்று காலை, 11:00 மணிக்கு, 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.அதேபோல, கே.ஆர்.எஸ்., அணையின் மொத்த நீர்மட்டம், 124 அடி; கொள்ளளவு, 49 டி.எம்.சி., நேற்று அணையின் நீர்மட்டம், 107 அடி, நீர் இருப்பு, 28 டி.எம்.சி.,யாக இருந்தது. நேற்று வினாடிக்கு, 20 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து, 1,500 கன அடி நீர் மட்டும் வெளியேற்றப்பட்டது. கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து, வினாடிக்கு, 41 ஆயிரத்து, 500 கன அடி நீர் வெளியேற்றுவதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம், 64.15 அடி, நீர் இருப்பு, 27.87 டி.எம்.சி., யாக இருந்தது. வினாடிக்கு, 3,613 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட நீர், இன்று மாலை மேட்டூர் அணையை வந்தடையும் என்பதால், வரும் நாளில், மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர வாய்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X