சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆடு திருடிய வாலிபர் வெட்டிக்கொலை: மற்றொருவர் கை துண்டிப்பு

Added : ஆக 05, 2020
Share
Advertisement

தென்காசி; தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நாச்சியார்புரத்தில் ஆடு திருடிய நெட்டூர் முத்துபாண்டி 24, வெட்டி கொலை செய்யப்பட்டார். பார்த்திபன் 25, கை துண்டிக்கப்பட்டது.

நெட்டூரை சேர்ந்த முத்துப்பாண்டி மீது கொலை வழக்கு இருக்கிறது. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் 5 பேருடன் இரு டூவீலர்களில் நாச்சியார்புரம் வயலில் உள்ள செல்லத்துரை, பட்டன் கிடைக்கு சென்று ஆடு திருடினார். அங்கு இருந்த செல்லத்துரை தடுத்தார். தகராறு ஏற்பட்டது.பட்டன், இரு மகன்கள் காளிராஜ், உச்சிமாகாளி மற்றும் வேல்முருகன், மணிகண்டன் ஆகியோருடன் ஆட்டுக்கிடைக்கு வந்தார். இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. பட்டன் மகன்கள் அரிவாளால் வெட்டியதில் முத்துப்பாண்டி இறந்தார். பார்த்திபன் இடதுகை துண்டிக்கப்பட்டது.

முத்துபாண்டி தரப்பினர் தாக்கியதில் இருமகன்களுடன் பட்டன் காயமடைந்தார்.இது தொடர்பாக பட்டன், காளிராஜ், உச்சிமாகாளி, வேல்முருகன், மணிகண்டன், செல்லத்துரை ஆகியோர் மீது கொலை வழக்கும், முத்துபாண்டியுடன் வந்த பார்த்திபன், கார்த்திக்ராஜா, பெரியதுரை, சுந்தர், மாரி ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்து வீரகேரளம்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X