பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை விரட்டுதா 'வைரஸ் ஷட் அவுட்?'

Added : ஆக 05, 2020
Share
Advertisement
 கொரோனாவை விரட்டுதா 'வைரஸ் ஷட் அவுட்?'

தமிழகத்தில், விற்பனைக்கு வந்துள்ளது, ஜப்பானின், 'வைரஸ் ஷட் அவுட்' என்ற, கொரோனா வைரஸ் விரட்டி அட்டை. இதன் உண்மை தன்மையை, சுகாதாரத்துறை ஆராய்ந்து அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

கொரோனா வைரஸ் பிடியில், தமிழகம் சிக்கி உள்ளது. எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற சொல்லுக்கு ஏற்ப, கொரோனாவை விரட்ட, யார் எது சொன்னாலும், அதை மக்கள் செய்து பார்க்கின்றனர்.இந்த தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க, பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. கொரோனா வுக்கு, 'டெக்ஸாமெதசோன்' என்ற, மருந்தை கண்டுபிடித்ததாக, பிரிட்டன் கூறுகிறது.

'ரெம்டெசிவர்'அமெரிக்க விஞ்ஞானிகள், 'ரெம்டெசிவர்' என்ற மருந்து, கொரோனாவை அழிப்பதாகவும், அது சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.மலேரியாவுக்கான மருந்தான, 'ஹைட்ராக்ஸி குளோரோக்வின்' கொரோனாவுக்கு எதிராக செயல்படும் என்றும் கூறப்படுகிறது. இப்படி, கொரோனாவை ஒழிக்க, உலகமே போராடி வருகிறது.ரூ. 1,764இந்நிலையில், ஜப்பான் தயாரிப்பான, 'வைரஸ் ஷட் அவுட்' என்ற சாதனம், கொரோனா நோய் தொற்றில் இருந்து காக்கும் என, விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து, இந்தியாவிலும், இது விற்பனைக்கு வந்துள்ளது. சமீப நாட்களாக, தமிழகத்திலும் பிரபல, 'ஆன்-லைன்' நிறுவனங்கள், இதை விற்பனை செய்து வருகின்றன. இந்த, 'வைரஸ் ஷட் அவுட்' அட்டையை வாங்கி கழுத்தில் மாட்டிக் கொண்டால், காற்றின் மூலம் பரவும் துகள்கள், பாக்டீரியாக்கள், வைரஸ்களிடம் இருந்து தடுக்கும் எனக் கூறப்படுகிறது.இந்த அட்டையை, கழுத்தில் அணிபவருக்கு, 1 மீட்டர் சுற்றளவுக்கு, கொரோனா அண்டாது எனவும், 'பிளாங்க்டோனிக் பாக்டீரியா, இன்புளூயன்சா' உள்ளிட்ட மற்ற வைரஸ்களையும் நீக்கும் என்றும் கூறப்படுகிறது.அணியும், 30 நாட்கள் வரை தான் பலன் தருமாம். இந்த அட்டை, 149 ரூபாய்க்கும், இரண்டு அட்டை, 230 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மொத்தமாக, 20 பாக்கெட்டுகள், 1,764 ரூபாய்க்கு விற்பனைஆகிறது.எதிர்பார்ப்புசமீபத்தில் பிரபலமாகிஉள்ள இந்த அட்டையை, தமிழகத்தில் உள்ள பல கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் அணிந்து வருகின்றனர். ஆனால், இதன் உண்மை தன்மையை, சுகாதாரத்துறை ஆய்வு செய்து அறிவிக்க வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பு.- நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X