சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கிலும் தொடரும் மணல் கொள்ளை

Added : ஆக 05, 2020
Share
Advertisement
 ஊரடங்கிலும் தொடரும் மணல் கொள்ளை

திட்டக்குடி : திட்டக்குடி அருகே வெள்ளாற்றிலிருந்து மணல் திருடும் கும்பல், ஊரடங்கை பயன்படுத்தி மீண்டும் மணலைத் திருடுகின்றனர்.

திட்டக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெள்ளாற்றங்கரையோரத்தில் இடைச்செருவாய், கீழ்ச்செருவாய், கோழியூர், தர்மகுடிகாடு ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளிலிருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு திருட்டுக் கும்பல் மணலை திருடி விற்று வந்தனர்.மாட்டுவண்டி, டிராக்டர் வைத்திருப்பவர்கள் சிலர் மணலை எடுத்து சென்று ஓரிடத்தில் கொட்டி லாரி மூலம் வெளியூருக்கு எடுத்து செல்ல உதவி வந்தனர். 2019ல் சப் இன்ஸ்பெக்டராக இருந்த அகிலன் மற்றும் போலீசாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக மணல் திருட்டு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.

தற்போது திட்டக்குடி டி.எஸ்.பி., மற்றும் திட்டக்குடி, ஆவினங்குடி போலீஸ் நிலையங்களை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட போலீசார் கொரோனா தொற்றால் சிகிச்சையில் உள்ளனர். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி மணல் திருடும் கும்பல் மீண்டும் இடைச்செருவாய், கீழ்ச்செருவாய், கோழியூர், தர்மகுடிகாடு அருகே வெள்ளாற்றிலிருந்து மணல் திருட்டில் ஈடுபட துவங்கியுள்ளது.ஒரு மாட்டுவண்டி மணலின் விலை ரூ.2,500 முதல் ரூ.4,000 வரை விற்கப்படுகிறது.

வருவாய்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த சிலரின் ஒத்துழைப்போடு மணல் திருட்டு நடப்பதால் பொதுமக்கள் புகார் அளித்தாலும் அதிகாரிகள் கண்டும், காணாமலும் உள்ளனர். மணல் திருட்டை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X