எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

ராகு காலத்தில் பிரச்னை இல்லை

Added : ஆக 05, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
நேற்று, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ராகு காலத்தில் நடந்தது பலர் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நிழல் கிரகமான ராகு காலம், தினமும், ஒன்றரை மணி நேரம் நீடிக்கும். நேற்று புதன்கிழமை, 12:00 மணி முதல், 1:30 மணி வரை ராகு காலம். வழக்கமாக, ராகு காலம், எம கண்டம் ஆகிய நேரங்களில் சுப காரியங்கள் செய்ய மாட்டார்கள். ஆனால், நேற்று, ராமர் கோவிலுக்கு, பிரதமர்,
Ayodhya, Ram Temple, Bhoomi pujan, Bhumi Pujan, Ram Janmabhoomi, Ram Mandir, PM, Modi, Narendra Modi

நேற்று, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ராகு காலத்தில் நடந்தது பலர் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நிழல் கிரகமான ராகு காலம், தினமும், ஒன்றரை மணி நேரம் நீடிக்கும். நேற்று புதன்கிழமை, 12:00 மணி முதல், 1:30 மணி வரை ராகு காலம். வழக்கமாக, ராகு காலம், எம கண்டம் ஆகிய நேரங்களில் சுப காரியங்கள் செய்ய மாட்டார்கள். ஆனால், நேற்று, ராமர் கோவிலுக்கு, பிரதமர், மோடி, மதியம், 12:45 மணிக்கு, அதாவது ராகு காலத்தில் அடிக்கல் நாட்டினார்.

இது பிரபல ஜோதிடர்கள் உட்பட, ஏராளமானோருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ராமஜென்ம பூமி இயக்கத்துடன் நீண்ட காலமாக செயல்பட்டு வரும், அறிஞர், பண்டிட் சர்மா,75, என்பவர் கொடுத்த ஆலோசனைப்படி தான், நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதாக கூறப்படுகிறது. பண்டிட் சர்மா, பனாரஸ் ஹிந்து பல்கலையில், ஜோதிடவியல் கல்வியில் தங்கப் பதக்கம் பெற்றவர். முன்னாள் பிரதமர்கள், மொரார்ஜி தேசாய், வாஜ்பாய் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களிடம் நெருங்கிப் பழகியவர்.

அவரை, ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு தேதி குறித்து தருமாறு, கோவில் நிர்வாகிகள் அணுகியபோது, ஜூலை, 29, 31 மற்றும் ஆக., 1, 5 தேதிகளை குறித்துக் கொடுத்தார். இவை அனைத்தும் ஷரவண மாதத்தில் வரும், முகூர்த்த தினங்கள். அத்துடன், நேற்று வாஸ்து முகூர்த்தமும் இருந்ததால், பூமி பூஜைக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. அதேசமயம், பனாரஸ் ஹிந்து பல்கலையின் ஜோதிட துறை வல்லுனர்கள், ராகு காலத்திற்கு முன்னதாக, அடிக்கல் நாட்டு விழா நடத்துமாறு பரிந்துரைத்தனர்.

இது குறித்து, சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது: இப்போது, நடந்தது வெறும் பூமி பூஜைதான். 1989, நவம்பர், 7ல், சர்ச்சைக்குரிய நிலத்தில், விஸ்வ இந்து பரிஷத் தலைவர்களும், சாமியார்களும், 7 அடி ஆழத்தில், அடிக்கல் நாட்டி, பூஜை நடத்தினர். தற்போது, கோவில் கட்டுமான பணி துவங்கியதன் அடையாளமாக, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க, அடிப்படை கட்டமைப்பு பணியாகும். இவ்வாறு. அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohanamurugan - panruti,இந்தியா
09-ஆக-202018:25:10 IST Report Abuse
mohanamurugan தமிழ்நாட்டில் மூட நம்பிக்கையை ஒழிக்க ராகுகாலத்தில் பகுத்தறிவாளர்கள் திருமணம் செய்வார்கள். மோடியும் இவர்களை பின்பற்றுவது வரவேற்கத்தக்கதே.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
06-ஆக-202019:45:08 IST Report Abuse
RajanRajan ராவண வாதம் முடிந்து ஹனுமான் வனத்தில் இருந்து ராமநாமத்தை ஜபித்து கொண்டிருந்தார். அப்போது ஒருவர் அனுமனிடம் நான் தொடங்கும் காரியத்திற்கு நல்ல நேரம் எப்போது என்று வினைவினார். அதற்கு ஹனுமான் சதா சர்வ காலமும் ராமநாமத்தை உச்சரித்து கொண்டிருக்கும் எனக்கு காலம் என்பது ஒன்றே அதில் நல்லதும் கெட்டதும் வித்தியாசமில்லை என பகர்ந்தார்.
Rate this:
Cancel
sasikumar - madurai,இந்தியா
06-ஆக-202019:30:15 IST Report Abuse
sasikumar இராகு காலத்தில் ஒரு செயலை செய்தால் அதே செயலை பல முறை செய்ய வேண்டியிருக்கும்.... எதற்காக செய்தார்கள் என்று புரிந்ததா....
Rate this:
Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா)ம்ம்... உளறு... உளறு... நல்லா உளறு... அடிச்சு விடு அரைகுறையா தெரிஞ்சிக்கிட்டு.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X