10 சதவீத இடஒதுக்கீடு வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
SC, Supreme Court, 10 percent reservation, 10 சதவீத இடஒதுக்கீடு, அரசியல் சாசன அமர்வு

புதுடில்லி: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, கடந்தாண்டு, ஜனவரியில், பார்லி.,யில் நிறைவேறியது. அதற்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இந்த சட்டத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இதைத் தவிர, பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யக் கோரி, மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை, ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக, தலைமை நீதிபதி, எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான, மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. கடந்தாண்டு, ஜூலை, 31ல், இந்த வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தலைமை நீதிபதி, எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள், ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு, இந்த வழக்குகள் அனைத்தையும், ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக, தன் தீர்ப்பில் கூறியுள்ளது.அரசியல் சாசன திருத்தத்தை எதிர்ப்பதால், இந்த வழக்குகளை, ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுவதாக, தன் தீர்ப்பில் அமர்வு கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
06-ஆக-202016:04:08 IST Report Abuse
ஆரூர் ரங் எந்த தீயமுக செயற்குழு உறுப்பினரோ மா செ யோ வட்டம் மாவட்டமோ வாரிசுகளுக்கு இடவொதுக்கீட்ட்டைப் பயன்படுத்துகிறார்களா? அத்தனைபேரும் கோடீசுவர . வாரிசுகள் சம்பளம் வாங்கும் வேலைக்குப் போவதை கேவலமாக நினைப்பவர்கள் ஊரைக் கொள்ளையடிப்பதைத்தான் கவுரவமாக நினைபபவர்கள் .அதாவது சாதாரணத் தொண்டனுக்கு சில ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு இடவொதுக்கீடு வேலை. ஆனா இவங்க குடும்பங்களுக்கு மட்டும் 1760000000000000000000 கேட்ச்., இளிச்சவாய தொண்டனே விழித்துக்கொள்
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
06-ஆக-202015:58:43 IST Report Abuse
ஆரூர் ரங் பத்து விழுக்காடு கூடாது . க்ரீமி லேயர் கூடாது .ஆகமொத்தம் ஏழைகள் உருப்படக்கூடாது . திரவிஷன்கள் மட்டுமே ஹம்மர் காரில்பறக்க வேண்டும் .
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
06-ஆக-202015:32:24 IST Report Abuse
vbs manian தொண்ணுறு சதத்துக்கு எல்லோரும் மண்டியிட்டு வரவேற்பார்கள். யாரும் எதுவும் கேட்க கூடாது. ஆ னால் இந்த பத்து சதத்துக்கு சிசேரியன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X