ராம ராஜ்ஜியத்தில் அனைவருக்கும் நீதி முன்னாள் துணை பிரதமர் அத்வானி பெருமிதம்

Added : ஆக 05, 2020
Share
Advertisement

புதுடில்லி; ''இந்தியாவின் வலிமை, வளம், சகோதரத்துவம் மற்றும் யாரையும் தவிர்க்காமல், அனைவருக்கும் நீதி வழங்கும் மகோன்னத அடையாள சின்னமாக, ராமர் கோவில் விளங்கும்,'' என, முன்னாள் துணை பிரதமரும், பா.ஜ., மூத்த தலைவருமான, எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா, இந்தியர்கள் அனைவருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க, உணர்வு பூர்வமான தினம் ஆகும். இதற்கான பணி, என் தலைமையில், 1990ல், சோமநாத் முதல், அயோத்தி வரை நடைபெற்ற ரத யாத்திரையில் துவங்கியது. ஏராளமானோரின் விருப்பம், சக்தியை ஒருங்கிணைக்க ரத யாத்திரை உதவியது. ராம ராஜ்ஜியம், சிறப்பான அரசாட்சிக்கு அடையாளம்.இந்திய கலாசாரம், நாகரீகம், பாரம்பரியத்தில், ராமர் மிக உன்னத இடத்தை பிடித்துள்ளார்.

கருணை, கண்ணியத்தின் அடையாளமாக, சாந்த சொரூபியாக காட்சி தருகிறார். இந்தியர்கள் அனைவரும், ராமரின் நற்பண்புகளை பின்பற்றி, அவர் வழி நடக்க, இந்த கோவில் உத்வேகம் அளிக்கும் என, நம்புகிறேன். ராம ெஜன்ம பூமியில், பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது, பா.ஜ.,வின் ஆசை. அது, என் நெஞ்சின் நீண்ட கால கனவு. இக்கனவு, தற்போது நிறைவேறியுள்ளது கண்டு மகிழ்கிறேன்.ராம ெஜன்ம பூமி இயக்கத்திற்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஏராளமானோர் விலைமதிப்பற்ற காணிக்கைகளை வழங்கியுள்ளனர்.

ஏராளமான தியாகங்களை செய்துஉள்ளனர். அவர்களுக்கும், சன்னியாசிகளுக்கும், தலைவர்களுக்கும், ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் இந்நன்னாளில், என் நன்றியை காணிக்கை ஆக்குகிறேன்.ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் வழங்கிய தெளிவான தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளித்தது. இது, இந்தியர்கள் இடையிலான பிணைப்பை பல காலத்திற்கு வலுப்படுத்தும். ராமரின் அருள், இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் பரிபூரணமாக கிடைக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X