பொது செய்தி

இந்தியா

ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.61 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
ராமர் கோவில் கட்டுமானத்திற்காக, குஜராத்தை சேர்ந்த, ஆன்மிக தலைவர், மொராரி பாப்பு, உலகம் முழுவதிலும் உள்ள தன் ஆதரவாளர்களிடம் இருந்து, 18.61 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளார்.குஜராத்தை சேர்ந்தவர், மொராரி பாப்பு. ஆன்மிக தலைவரான இவர், தன், 14வது வயதில் இருந்து, ராமாயண சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இவருக்கு, உலகம் முழுதும், ஆதரவாளர்கள் உள்ளனர்.ராமஜென்ம பூமி விவகாரத்தில், 'ராமர் ஒரு
ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.61 கோடி நிதி

ராமர் கோவில் கட்டுமானத்திற்காக, குஜராத்தை சேர்ந்த, ஆன்மிக தலைவர், மொராரி பாப்பு, உலகம் முழுவதிலும் உள்ள தன் ஆதரவாளர்களிடம் இருந்து, 18.61 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளார்.

குஜராத்தை சேர்ந்தவர், மொராரி பாப்பு. ஆன்மிக தலைவரான இவர், தன், 14வது வயதில் இருந்து, ராமாயண சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இவருக்கு, உலகம் முழுதும், ஆதரவாளர்கள் உள்ளனர்.ராமஜென்ம பூமி விவகாரத்தில், 'ராமர் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் சொந்தமானவரல்ல. அவர், ஒட்டுமொத்த உலகுக்கும் சொந்தமானவர்' என்ற கருத்தை வலியுறுத்தினார்.


latest tamil newsஅயோத்தியில், ராமர் கோவில் கட்ட, 5 கோடி ரூபாய் நிதி அளிக்க விரும்புவதாக தெரிவித்த மொராரி பாப்பு, உலகம் முழுவதும் உள்ள, தன் ஆதரவாளர்களிடம், நிதி திரட்ட துவங்கினார். இந்தியாவில் இருந்து, 11.30 கோடி ரூபாய் நிதி திரண்டது. அதை, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் வங்கி கணக்கில், நேற்று ஒப்படைத்தார்.

மேலும், ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் இருந்து, 3.21 கோடி ரூபாயும், அமெரிக்கா, கனடா மற்றும் இதர நாடுகளில் இருந்து, 4.10 கோடி ரூபாயும் திரட்டப்பட்டது.'வெளிநாட்டு நன்கொடைகள் பெறுவதற்கான முறையான அனுமதி கிடைத்த பிறகு, அந்த தொகை, அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
06-ஆக-202013:10:46 IST Report Abuse
Lion Drsekar ஒரு உண்மையான குருவுக்கு உண்டான எல்லா தகுதிகளையும் பெற்றவர், இவர் கையால் பெரும் தொகைக்கே உண்மையான மதிப்பும் இருக்கும், புனிதமானதும் கூட. இவர் நீடூடி வாழ இறைவனை வேண்டுவோம் வந்தே மாதரம்
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
06-ஆக-202010:59:48 IST Report Abuse
thamodaran chinnasamy தாங்கள் நீண்ட ஆயுளாறோக்கியத்துடன் இருக்க எல்லாம்வல்ல இறைவனைப்பிரார்த்திக்கின்றேன்.ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம் .
Rate this:
Cancel
06-ஆக-202010:29:23 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Priyan Vadanad Madhurai, really you dont know the foreign religion using the money to convert? are you already converted so act like you dont know.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X