தங்க கடத்தல் வழக்கு: கண்காணிப்பு வளையத்திற்குள் இரு அமைச்சர்கள்

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Kerala Gold Smuggling Case, NIA, Gold Smuggling, Kerala, கேரள தங்க கடத்தல்

திருவனந்தபுரம் : கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய, முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷின் அழைப்பின் பேரில், கேரள அமைச்சர்கள் இருவர், மத்திய அரசின் அனுமதியின்றி, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்திற்கு, மூன்று முறை சென்று வந்தது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இரு அமைச்சர்களும், என்.ஐ.ஏ., கண்காணிப்பு வளையத்தின் கீழ், கொண்டு வரப்பட்டுள்ளனர்.

மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து, 15 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 கிலோ தங்கம், கடந்த மாதம், 5ல், கேரளா கடத்தி வரப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபுஎமிரேட்ஸ் துாதரகத்தின் பெயருக்கு வந்த, இந்த தங்க கட்டிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.


அரசியல் உள்நோக்கம்


இந்த வழக்கில், ஸ்வப்னா சுரேஷ், சரித் குமார், சந்தீப் நாயர், கே.டி.ரமீஸ் ஆகியோரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பினர், கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் மீது, சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில், அரசியல் உள்நோக்கம் இருப்பதாக, குற்றவாளிகள் தரப்பில், நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, என்.ஐ.ஏ., தரப்பு, வழக்கு விசாரணை குறித்த விபரங்களை, 'சீல்' இடப்பட்ட உறையில் வைத்து, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. குற்றவாளிகளுக்கு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், என்.ஐ.ஏ., தரப்பு தெரிவித்தது.

'ஸ்வப்னா சுரேஷ், 2016 அக்டோபரில் இருந்து, 2019 அக்டோபர் வரை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தில், முக்கிய அதிகாரியாக பணியாற்றினார். அப்போது, மாநில அரசு உயர் அதிகாரிகளின் நெருங்கிய தொடர்பு கிடைத்துள்ளது. 'அந்த தொடர்புகளை பயன்படுத்தி, இந்த கடத்தல் நாடகத்தை, மிக சுலபமாக அரங்கேற்றி உள்ளார்' என, என்.ஐ.ஏ.,அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தில், ஸ்வப்னா பணியாற்றிய காலக்கட்டத்தில், கேரள அமைச்சர்கள் இருவர், மூன்று முறை துாதரகத்திற்கு வந்து சென்றது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. துாதரகத்தில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்க, ஸ்வப்னாவின் அழைப்பின் பேரில், இரு அமைச்சர்களும் சென்று உள்ளனர்.

மேலும், தன் மகன் விசா தொடர்பாகவும், ஒரு அமைச்சர் சென்று வந்துள்ளார். ஸ்வப்னாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த தகவல் தெரிய வந்துள்ளது.


கோரிக்கை


பொதுவாக, மாநில அமைச்சர்கள், துாதரக விழாக்களில் பங்கேற்க, மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் அனுமதியை பெற வேண்டும் என்பது மரபு. இந்த விதிமுறைகளை மீறி, இரு அமைச்சர்கள் சென்று வந்துள்ள விபரம், மத்திய புலனாய்வு துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கேரள அமைச்சர்கள் இருவரும், விசாரணை அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று விசாரணை நடத்த, என்.ஐ.ஏ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்திடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள், விரைவில் கோரிக்கை வைக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.


அமலாக்க துறை காவல்


குற்றவாளிகள் ஸ்வப்னா, சரித் மற்றும் சந்தீப் ஆகியோர் மீது, பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையினர், கடந்த மாதம், வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க, சிறப்பு நீதிமன்றத்தில், அனுமதி கோரினர். இதையடுத்து, குற்றவாளிகள் மூவரையும், அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க, நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
06-ஆக-202021:27:13 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN இது எத்தனையாவது முறை தங்க கடத்தலில். ஆளாப்பாரு நல்லாத்தான் நாகரிகமாக உள்ளாள். இப்படி ஓர் தொழிலா இவளுக்கு. காரி முழிகிறது சே சே....
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
06-ஆக-202017:20:39 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இங்கு முருகன் ஆட்டம் ஆரம்பம், அங்கு ஐயப்பன் ஆட்டம் ஆரம்பம் ..தப்ப முடியாது தப்ப கூடாது ..
Rate this:
Cancel
06-ஆக-202015:13:18 IST Report Abuse
Ganesan Madurai அவனுங்க இரண்டு பேரும் கேரள முஸ்லிம்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X