காஷ்மீரில் மூக்கை நுழைத்த சீனாவுக்கு இந்தியா பதிலடி

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
Kashmir, India, China, காஷ்மீர், சீனா, இந்தியா, பதிலடி

பீஜிங் : '' காஷ்மீர் பிரச்னை தொடர்பாக, இந்தியா - பாக்., இடையிலான கருத்து வேறுபாடுகளுக்கு, இரு தரப்பு பேச்சின் மூலம் தீர்வு காணலாம்,'' என, சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர், வாங் வென்பின் தெரிவித்துள்ளார். இந்த பிரச்னையில் சீனா மூக்கை நுழைக்க எந்த அருகதையும் இல்லை என, இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: காஷ்மீர் பிராந்தியத்தின் நிலவரத்தை, சீனா கூர்ந்து கவனித்து வருகிறது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே, நீண்ட காலமாக பிரச்னை உள்ளது. இது குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தியா - பாக்., இடையே பல ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன.

அதனால், தற்போதைய சூழலை, தன்னிச்சையாக மாற்றும் எந்த நடவடிக்கையும் செல்லுபடியாகாது. அது, சட்டபூர்வமானதும் அல்ல. இந்தியா - பாக்., அமைதியான முறையில், பேச்சு மூலம், பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இந்தியாவும், பாகிஸ்தானும், அண்டை நாடுகள். அதனால், இரு நாடுகளுக்கு மட்டுமின்றி, சர்வதேச சமூகத்திற்கும், பிரச்னையை அமைதியாக பேசி தீர்ப்பதே நன்மை அளிக்கும்.

பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு இரு நாடுகள் இணைந்து செயலாற்றும் என, சீனா நம்புகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கு இந்திய வெளியுறவுத்துறை பதிலடி கொடுத்துள்ளது. ''இந்த பிரச்னையில் சீனாவுக்கு எந்த பங்கும், பொறுப்பும் இல்லை. மற்ற நாடுகளின் பிரச்னையில், கருத்துச் சொல்ல தேவையில்லை என்பதே சீனாவுக்கு எங்களின் புத்திமதி'' என, இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.


அது வேறு... இது வேறு


இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை உள்ளது. அதேசமயம், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவும் உள்ளது. அதனால், எல்லை பிரச்னை காரணமாக, இந்தியா - சீனா உறவு பாதிக்காது. இந்திய நண்பர்களும் இதே கருத்தைத் தான் தெரிவிக்கின்றனர்.

- குய் தியன்கய், சீனாவுக்கான அமெரிக்க துாதர்

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
08-ஆக-202021:09:25 IST Report Abuse
madhavan rajan சீனா ஹாங்காங் மற்றும் தாய்வான் விஷயத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று இந்தியா அறிவுறுத்தினால் ஏற்பார்களா? சீனாவில் முஸ்லீம்களுக்கு ஒழுங்கான மரியாதை தரப்படுகிறதா என்பதை பார்க்கவும்.
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
07-ஆக-202020:56:15 IST Report Abuse
Somiah M பந்தியிலே உட்க்காராதேன்னு சொல்கிற பொழுது......... இலை பீத்தல் இலை பீத்தல் என்றுகூறுவதை போல் உள்ளது சீனாவின் சமரச பேச்சு நடவடிக்கை .
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
06-ஆக-202014:16:20 IST Report Abuse
மலரின் மகள் இனி எந்த யுத்தம் வந்தாலும் உடனடியாக பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கின்ற நமது பகுதிகளை யுத்தத்தில் மீட்டெடுத்து விடவேண்டும், அதன் பிறகு உடன்படிக்கையில் அவர்களை நமக்கு சாதகமாக தீர்வுகளை பெற்று விடலாம். பாகிஸ்தான் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்திருக்கும் கில்கிஸ்ட் பாலிடிஸ்ட்தான் பகுதிகளை நமது இந்திய எல்லை கடந்த இந்திய பகுதிகளாக வென்று நம் வசம் வைத்துக் கொள்ளவேண்டும். அவை எல்லாம் நம்மிடம் இருந்த பகுதிகளே. எதற்கு இன்னமும் திரும்ப பெற்று கொள்ளாமல் இருக்கவேண்டும். முஸ்லீம் தேசங்கள் அனைத்தும் கத்தர் அளவிற்கு சிறு சிறு சுல்தான் தேசங்களாக இருப்பது தான் அவர்களுக்கும் உலகிற்கும் நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X