பொது செய்தி

இந்தியா

ஜம்மு-காஷ்மீர் துணை நிலை கவர்னர் மர்மு திடீர் ராஜினாமா ஏன் ?

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Jammu and Kashmir Lieutenant Governor GC Murmu ,resigns , after abrogation of Article 370

புதுடில்லி :ஜம்மு - காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் ஜி.சி.முர்மு, தனது பதவியை ராஜினாமா செய்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.ஜம்மு -- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 5ல், ரத்து செய்யப்பட்டது. அதன் பின், ஜம்மு -- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை, தனித்தனி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.


latest tamil news


ஜம்மு -- காஷ்மீரின், லெப்டினன்ட் கவர்னராக, கிரீஷ் சந்திர முர்மு, கடந்த ஆண்டு, அக்டோபர், 31ல் பதவி ஏற்றார்.நேற்றுடன், ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அவர் தன் கவர்னர் பதவியை ராஜினாமா செய்ததாக, நேற்றிரவு தகவல் வெளியானது.அவர், தனது ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தை, ஜனாதிபதி ஏற்றாரா அல்லது நிராகரித்தாரா என்பது குறித்து, தகவல் வெளியிடப்படவில்லை.
மத்திய தணிக்கை குழு தலைவராக பதவி வகித்து வரும், ராஜிவ் மெஹ்ரிஷி, அடுத்த வாரம் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அந்த பதவியில், முர்மு நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.-

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
06-ஆக-202012:11:59 IST Report Abuse
Suppan காஷ்மீரில் 4 ஜி ஆரம்பித்துவிட வேண்டும் என்று ஒரு ட்வீட் போட்டார். அதனால் வந்த வினை.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-ஆக-202010:20:56 IST Report Abuse
Malick Raja மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று ... கொரோனா நினைக்கிறது வாழ்வு தொடருமென்று ..
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
06-ஆக-202007:59:23 IST Report Abuse
Elango ஜம்மு காஷ்மீர் மாநிலமாகவும், லடாக் யூனியன் பிரதேசமாகவும் மாற்றி தேர்தல் உடனே நடத்த வேண்டும்... பிஜேபி வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது... அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் நெடு நாள் ஊரடங்கு நல்லதல்ல....
Rate this:
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
06-ஆக-202009:27:42 IST Report Abuse
சத்யமேவ ஜெயதேஇப்போது தான் அங்கே நிலைமை சீரடைந்து வருகிறது. இப்போது தேர்தல் நடத்துவதால் புல்லுருவிகள் தங்கள் வேலையை காட்டுவார்கள். மக்களை முழுமையாக மனமாற்றி அவர்களுக்கு தொழில் வர்த்த ரீதியாக ஒரு நல்ல நிலையை அடைந்தவுடன் தேர்தல் நடத்துவதே சால சிறந்தது. இப்போது தான் அவர்கள் தேசிய நீரோடையில் கலந்து வருகிறார்கள். அதனால் இன்னும் கால அவகாசம் வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X