ஜம்மு-காஷ்மீர் துணை நிலை கவர்னர் மர்மு திடீர் ராஜினாமா ஏன் ?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜம்மு-காஷ்மீர் துணை நிலை கவர்னர் மர்மு திடீர் ராஜினாமா ஏன் ?

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (8)
Share
புதுடில்லி :ஜம்மு - காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் ஜி.சி.முர்மு, தனது பதவியை ராஜினாமா செய்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.ஜம்மு -- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 5ல், ரத்து செய்யப்பட்டது. அதன் பின், ஜம்மு -- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை, தனித்தனி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.ஜம்மு -- காஷ்மீரின், லெப்டினன்ட் கவர்னராக, கிரீஷ் சந்திர முர்மு, கடந்த
Jammu and Kashmir Lieutenant Governor GC Murmu ,resigns , after abrogation of Article 370

புதுடில்லி :ஜம்மு - காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் ஜி.சி.முர்மு, தனது பதவியை ராஜினாமா செய்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.ஜம்மு -- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 5ல், ரத்து செய்யப்பட்டது. அதன் பின், ஜம்மு -- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை, தனித்தனி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.


latest tamil news


ஜம்மு -- காஷ்மீரின், லெப்டினன்ட் கவர்னராக, கிரீஷ் சந்திர முர்மு, கடந்த ஆண்டு, அக்டோபர், 31ல் பதவி ஏற்றார்.நேற்றுடன், ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அவர் தன் கவர்னர் பதவியை ராஜினாமா செய்ததாக, நேற்றிரவு தகவல் வெளியானது.அவர், தனது ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தை, ஜனாதிபதி ஏற்றாரா அல்லது நிராகரித்தாரா என்பது குறித்து, தகவல் வெளியிடப்படவில்லை.
மத்திய தணிக்கை குழு தலைவராக பதவி வகித்து வரும், ராஜிவ் மெஹ்ரிஷி, அடுத்த வாரம் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அந்த பதவியில், முர்மு நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.-

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X