கர்நாடகாவில் ஒரே நாளில் 5,407 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்| 5,407 people recover from coronavirus in Karnataka | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் ஒரே நாளில் 5,407 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020
Share
பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே நாளில் 5,407 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்.இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74,679 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 49 சதவீதமாக உயர்ந்துள்ளது.சமீபகாலமாக பெங்களூருவில் கொரோனாவிலிருந்து அதிகமானோர் குணமடைந்து வருவதாக மாநகர கமிஷனர் தெரிவித்தார். கடந்த ஒரு வாரத்தில்
karnataka, corona, recovery rate, கர்நாடகா, கொரோனா, பாதிப்பு, மீண்டனர், பலி

பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே நாளில் 5,407 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்.

இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74,679 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 49 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சமீபகாலமாக பெங்களூருவில் கொரோனாவிலிருந்து அதிகமானோர் குணமடைந்து வருவதாக மாநகர கமிஷனர் தெரிவித்தார். கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 14212 ஆக இருந்தது. ஆனால் அதே காலகட்டத்தில் 15,214 பேர் குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும் கர்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் 5619 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதயைடுத்து அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,51,449 ஆக உயரந்தது.


latest tamil newsபெங்களூருவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஒரே நாளில் 100 கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 2,804 ஆக உயர்ந்தது. மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களில் மொத்தம் 73,598 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X