பொது செய்தி

இந்தியா

ராம ராஜ்ஜியத்தில் அனைவருக்கும் நீதி: அத்வானி பெருமிதம்

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
LK Advani, Ayodhya, Ram Temple, Bhoomi pujan, Bhumi Pujan, Ram Janmabhoomi, Ram Mandir, PM, Modi, Narendra Modi

புதுடில்லி: ''இந்தியாவின் வலிமை, வளம், சகோதரத்துவம் மற்றும் யாரையும் தவிர்க்காமல், அனைவருக்கும் நீதி வழங்கும் மகோன்னத அடையாள சின்னமாக, ராமர் கோவில் விளங்கும்,'' என, முன்னாள் துணை பிரதமரும், பா.ஜ., மூத்த தலைவருமான, எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா, இந்தியர்கள் அனைவருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க, உணர்வு பூர்வமான தினம் ஆகும். இதற்கான பணி, என் தலைமையில், 1990ல், சோமநாத் முதல், அயோத்தி வரை நடைபெற்ற ரத யாத்திரையில் துவங்கியது. ஏராளமானோரின் விருப்பம், சக்தியை ஒருங்கிணைக்க ரத யாத்திரை உதவியது. ராம ராஜ்ஜியம், சிறப்பான அரசாட்சிக்கு அடையாளம்.

இந்திய கலாசாரம், நாகரீகம், பாரம்பரியத்தில், ராமர் மிக உன்னத இடத்தை பிடித்துள்ளார். கருணை, கண்ணியத்தின் அடையாளமாக, சாந்த சொரூபியாக காட்சி தருகிறார். இந்தியர்கள் அனைவரும், ராமரின் நற்பண்புகளை பின்பற்றி, அவர் வழி நடக்க, இந்த கோவில் உத்வேகம் அளிக்கும் என, நம்புகிறேன். ராம ஜென்ம பூமியில், பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது, பா.ஜ.,வின் ஆசை. அது, என் நெஞ்சின் நீண்ட கால கனவு. இக்கனவு, தற்போது நிறைவேறியுள்ளது கண்டு மகிழ்கிறேன்.

ராம ஜென்ம பூமி இயக்கத்திற்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஏராளமானோர் விலைமதிப்பற்ற காணிக்கைகளை வழங்கியுள்ளனர். ஏராளமான தியாகங்களை செய்துஉள்ளனர். அவர்களுக்கும், சன்னியாசிகளுக்கும், தலைவர்களுக்கும், ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் இந்நன்னாளில், என் நன்றியை காணிக்கை ஆக்குகிறேன்.

ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் வழங்கிய தெளிவான தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளித்தது. இது, இந்தியர்கள் இடையிலான பிணைப்பை பல காலத்திற்கு வலுப்படுத்தும். ராமரின் அருள், இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் பரிபூரணமாக கிடைக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


ராம ராஜ்ஜியத்துக்கான சாட்சி:

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, நடத்தப்பட்ட அடிக்கல் நாட்டு விழாவுக்காக, அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழா, இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தையும், மக்களின் உறுதியையும் பறைசாட்டியுள்ளது. ராம ராஜ்ஜியத்துக்கான சாட்சியமாகவும், நவீன இந்தியாவுக்கான அடையாளமாகவும், இந்த விழா விளங்குகிறது.
- ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி


நீண்ட நாளைய கனவு:

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட வேண்டும் என, 500 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியர்கள் கனவு கண்டு வந்தனர். அவர்களின் கனவு, இப்போது நனவாகியுள்ளது. பிரதமர் மோடி போன்ற உறுதியான தலைமை அமைந்ததால் தான், அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான பாக்கியம் கிடைத்துள்ளது.
- அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,


ராமர் என்றால் அன்பு:

ராமர் என்றால் அன்பு; அவர் ஒரு போதும், வெறுப்பில் தோன்ற முடியாது. ராமர் என்றால் கருணை; அவர் ஒருபோதும், கொடூரமாக தோன்ற முடியாது. ராமர் என்றால் நீதி; அவர் ஒரு போதும், அநீதியாக தோன்ற முடியாது. மனிதநேயத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் ராமர்.
- ராகுல், எம்.பி., காங்கிரஸ்


கவுரவமிக்க நாள்:

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட நாள், இந்தியர்கள் அனைவருக்கும் கவுரவம் மற்றும் பெருமைமிக்க நாளாக அமைந்துள்ளது. ராமர் கோவில் கட்டுவதற்காக பாடுபட்ட அனைவருக்கும், என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
- ஜே.பி.நட்டா, தேசிய தலைவர், பா.ஜ.,


மீண்டும் நிரூபணம்:

அயோத்தியில், ராமர் கோவில் அடிக்கல் நாட்டப்பட்ட தினம், இந்திய வரலாற்றில், பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். 500 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வந்த போராட்டம், வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. கொடுத்த வாக்குறுதியை பா.ஜ., நிறைவேற்றும் என்பது, மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
- விஜய் ரூபானி, குஜராத் முதல்வர், பா.ஜ.,


வேற்றுமையில் ஒற்றுமை:

நம் நாடு, வேற்றுமையில் ஒற்றுமை என்ற வழிவந்தது. இதை நாம் உயர்த்திப் பிடித்தே வந்துள்ளோம். இந்தக் கொள்கையை, நம் இறுதி மூச்சு வரை காப்பாற்ற வேண்டும். ஏனெனில், இந்த ஒற்றுமை தான், நம் நாட்டை சர்வதேச அளவில் உயர்த்தி, வளர்ச்சியை ஏற்படுத்தும்.
- மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,


உலகிற்கே வழிகாட்டும்:

பகவான் ராமரின் அருள், நமக்கு தொடர்ந்து கிடைக்கட்டும், அவருடைய அருளால், நாடு வறுமையிலிருந்தும் ஏழ்மையிலிருந்தும் விடுபடும். உலகின் சக்தி வாய்ந்த நாடாக, இந்தியா எழுச்சிபெற்று, வரும் காலங்களில் உலகிற்கே வழிகாட்டும். ஜெய் ஸ்ரீராம், ஜெய் பஜ்ரங்பலி.
- கெஜ்ரிவால், டில்லி முதல்வர், ஆம் ஆத்மி


கற்றுக் கொடுக்கிறது:

நம் பண்பாடு மற்றும் நாகரிகத்தில், பகவான் ராமர் தனித்துவமான இடம் பிடித்துள்ளார். உண்மை, நீதி, சமத்துவம், கருணை மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை, அவரது வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுக்கிறது. பகவான் ராமர் மதிப்பீடுகளின் படி, நாம் சமத்துவ சமுதாயம் படைப்பதில், கவனம் செலுத்த வேண்டும்.
- அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல்வர், காங்.,


ராமர் காட்டிய வழி:

எதிர்கால சந்ததியினர், 'மரியாதை புருஷோத்தமர்' என அழைக்கப்படும் ராமர் காட்டிய வழியில் நடப்பார்கள். அது, நம் அனைவருக்கும், அமைதியை வழங்கும்.
- அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி கட்சி


பால் தாக்கரேவின் கனவு:

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பது, சிவசேனா நிறுவனர், பால் தாக்கரேவின் கனவாகும், அவரது கனவு, இப்போது நனவாகியுள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
- சஞ்சய் ராவத், எம்.பி., சிவசேனா


அரசியல் செய்ய முடியாது:

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வழி வகுத்தது உச்ச நீதிமன்றம் தான். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம். இனி, அயோத்தியை வைத்து, யாரும் அரசியல் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தியதற்காக, உச்ச நீதிமன்றத்தைப் பாராட்டுவோம்.
- மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ்


நனவான கனவு:

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற இந்தியர்கள் அனைவரின் நீண்ட நாளைய கனவு, நனவாகியுள்ளது. ராமரின் தர்ம சிந்தனைகள், இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலகுக்கே வழிகாட்டியாக அமைந்துள்ளது.

- அமரீந்தர் சிங், பஞ்சாப் முதல்வர், காங்.


5 நுாற்றாண்டுகளின் தலைவர்:

தன் திறமையான தலைமை பண்பால், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான வழியை, பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். இதன் மூலம், ஐந்து நுாற்றாண்டுகளின் தலைவராக, அவர் உருவெடுத்துள்ளார்.
- சிவராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,


ராமர் கோவில் வரலாற்று நிகழ்வு

''அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, பரஸ்பர அன்பு, சகிப்பு தன்மை மற்றும் பரந்த மனப்பான்மைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி,'' என மாதா அமர்தானந்த மயி தேவி தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை குறித்து, மாதா அமர்தானந்தமயி தேவி, வீடியோவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, மகத்தான ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. இந்த கோவில் எழுப்பப்படுவதால், ஒரு தரப்பினருக்கு வெற்றியோ, இன்னொரு தரப்பினருக்கு தோல்வியோ கிடையாது.

இது பரஸ்பர அன்பு, சகிப்பு தன்மை மற்றும் பரந்த மனப்பான்மைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.மக்கள் அனைவரும், இதே பரஸ்பர அன்புடன், பொறுமை உணர்வுடன், விசாலமான மனதுடன் வாழ, இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா இதை கேட்டால் சம்பூகன் மற்றும் வாலியின் ஆத்மா மன்னிக்காது
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
06-ஆக-202020:07:26 IST Report Abuse
பாமரன் அத்வானி தன்னை கூப்பிடாததை நாசூக்காக சொன்னது மட்டுமில்லாமல் ஜிஜியை பற்றி வாய்க வாய்க வாய்க போடாமலும் டபாய்ச்சிட்டாரு... நம்ம தள பகோடாஸ் என்னவெல்லாம் சொல்லி அந்த பெரியவரை திட்ட போறாய்ங்களோ...???
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,இந்தியா
06-ஆக-202016:18:08 IST Report Abuse
Abdul Aleem நீதியா அது எங்கே இப்போ இந்தியாவில் கிடையாது மீண்டும் வரும் அப்பொழுது எல்லோரும் மறைந்துவிடுவார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X