சுஷாந்த் சிங் மரணத்தில் உண்மை வெளிவர வேண்டும்: உச்சநீதிமன்றம்

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Sushant Singh death, Sushant Singh Rajput, Sushant Singh suicide, supreme court

புதுடில்லி, 'திறமைமிக்க நடிகரான சுஷாந்த் சிங்கின் மரணத்தில் உள்ள உண்மை வெளிவர வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கூறிஉள்ளது.

இதற்கிடையே, சி.பி.ஐ., விசாரணைக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.பீஹாரை சேர்ந்த, 'பாலிவுட்' நடிகர் சுஷாந்த் சிங், 34, ஜூன், 14ம் தேதி மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தன் மகன் மரணத்தில், அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு உள்ளதாக, பீஹார் போலீசிடம் சுஷாந்தின் தந்தை சிங் புகார் அளித்தார்.


latest tamil news
இதையடுத்து, ரியா மீது வழக்குப்பதிவு செய்த பீஹார் போலீசார், இந்த வழக்கை விசாரிக்கத் துவங்கினர். இதற்கிடையே, நேற்று முன்தினம், சுஷாந்த் தந்தையின் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க, பீஹார் அரசு பரிந்துரைத்தது.இந்நிலையில், தன் மீதான வழக்கை, பாட்னாவில் இருந்து மும்பைக்கு மாற்றக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ரியா தாக்கல் செய்த மனு, நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,“பீஹார் அரசின் பரிந்துரையை ஏற்று, சுஷாந்த் மரண வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது,” என்றார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:ஒரு திறமையான நடிகர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்தில் உள்ள உண்மை வெளிவர வேண்டும். மும்பை போலீசார், நற்பெயர் பெற்றிருந்தாலும், விசாரணைக்கு சென்ற பீஹார் போலீஸ் அதிகாரியை, வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளது முறையல்ல.

இந்த வழக்கில், இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணை குறித்த விவரங்களை, மும்பை போலீசார் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை, அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி, மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
06-ஆக-202015:11:34 IST Report Abuse
Thiagarajan Kodandaraman முக்கியமான பதவியில் உள்ள மவனின் தூண்டுதலோடுதான் இந்த அப்பாவியின் மரணம் நடைபெற்றுள்ளது ..உடனடியாக கைது செய்து தூக்கு மேடைக்கு அனுப்பவேண்டும் ...வீரசிவாஜி பூமியில் அருமையாக நடித்த அந்த மனிதருக்கு இந்த அக்கிரமம் நடந்துள்ளது
Rate this:
Cancel
TT.KUMAR -  ( Posted via: Dinamalar Android App )
06-ஆக-202014:06:36 IST Report Abuse
TT.KUMAR மக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக இருப்பதற்கு உண்மைக் குற்றவாளிகள் சட்டத்தின் நிறுத்தப்பட வேண்டும்.
Rate this:
Cancel
K.ANBARASAN - muscat,ஓமன்
06-ஆக-202008:51:23 IST Report Abuse
K.ANBARASAN நடந்ததை எல்லாம் பார்க்கும் போது இது தற்கொலை அல்ல என்பது தெளிவாகிறது. மும்பை போலீஸ் இதில் நேர்மையாய் இல்லாதது அவர்களின் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. பாலிவுட் மும்பை போலீசை கைக்குள் வைத்திருக்கிறது பெரும்பணம் உண்மையை மறைக்க விளையாடி இருக்கலாம். தக்க சமயத்தில் சுஷாந்தின் தந்தை வழக்கு தொடர்ந்துள்ளார். ரியாவுக்கு இதில் தொடர்பு அதிகம் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X