பொது செய்தி

இந்தியா

கேரளாவில் ஒரே நாளில் 1,234 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,234 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,537 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் தற்போது கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 60 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது.



latest tamil news


இருப்பினும் கேரளாவில் புதிதாக ஒரே நாளில் 1,195 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர். இதையடுத்து அங்கு கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 29,145 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 7 பேர் கொரோனாவுக்கு பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்தது.

புதிதாக பாதிப்பு அடைந்தவர்களில் 971 பேருக்கு கொரோனா நோயாளிகள் தொடர்பில் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 66 பேருக்கு தொற்று யார் மூலம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. புதிதாக பாதிப்புக்குள்ளானவர்களில் 125 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். மீதி 79 பேருக்கு யார் மூலமாக தொற்று ஏற்பட்டது என்று தெரியவில்லை.

அதிகபட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 274 பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் 167 பேருக்கும், காசர்கோடு மாவட்டத்தில் 128 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 120 பேருக்கும், ஆலப்புழா மாவட்டத்தில் 108 பேருக்கும், திருச்சூர் மாவட்டத்தில் 86 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தில் 61 பேருக்கும், கோட்டயம் மாவட்டத்தில் 51 பேருக்கும், இடுக்கி மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் தலா 39 பேருக்கும், பாலக்காடு மாவட்டத்தில் 41 பேருக்கும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 37 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தில் 30 பேருக்கும், வயநாடு மாவட்டத்தில் 14 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.


latest tamil news


இதுதவிர மாநிலத்தில் 5551 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப் பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வந்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு தலா ரூ 5000 கொடுக்க இன்று கேரள அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. அதற்காக ரூ 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் அங்கு 11,617 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 25,096 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
06-ஆக-202016:06:01 IST Report Abuse
Raj இந்தியாவுக்கே முன் உதாரணம். ஐ நா வில்லிலிருந்து கூட பாராட்டினார்கள் அங்குள்ள சுகாதார அமைச்சரை
Rate this:
Cancel
SOMAN SREEKANDAN - trivandrum,இந்தியா
06-ஆக-202009:48:21 IST Report Abuse
SOMAN SREEKANDAN பொய் கணக்கு
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
06-ஆக-202008:24:22 IST Report Abuse
Balasubramanian Ramanathan தமிழனுக்கு இதை விட மகிழ்ச்சி செய்தி எதுவும் இருக்காது ‌.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X