பொது செய்தி

இந்தியா

சீன ராணுவம் தொடர்ந்து முகாம்: எல்லையில் பதற்றம் நீடிப்பு

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement

புதுடில்லி; ராணுவ உயரதிகாரிகள் நிலையிலான பேச்சு நடந்த பிறகும், சீனா தன் படைகளை திரும்பப் பெறாததால், எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.latest tamil newsஇந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்னை மோசமடைந்து வருகிறது. இரு ராணுவத்தினரும் மோதிக் கொண்டதைத் தொடர்ந்து, படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.

பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பல கட்டங்களாக, பல நிலைகளிலும் பேச்சு நடந்துள்ளது. அதன் பிறகும், பாங்காங், தேப்சாங், கோக்ரா பகுதிகளில் இருந்து சீனா தன் படைகளை திரும்பப் பெறவில்லை.இந்தப் பகுதிகளில், அதிக அளவு சீன ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளதுடன், ஆயுதங்கள், பீரங்கிகள் என, தளவாடங்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.


latest tamil newsஇந்நிலையில், 'இரு நாட்டின் உயர்நிலை அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் இடையேயான பேச்சு நடப்பதே, உடனடி தீர்வாக இருக்கும்' என, நிபுணர்கள் கூறுகின்றனர் .இதற்கிடையே, சீன விவகாரம் தொடர்பான உயர்நிலை குழு கூட்டமும் சமீபத்தில் நடந்தது. இந்தக் குழுவில், வெளியுறவு, உள்துறை மற்றும் ராணுவத் துறைக்கான செயலர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அஜித் தோவலும் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
06-ஆக-202015:34:08 IST Report Abuse
Raj மோடி வந்தபின் சிறிய அண்டை நாடுகளுக்கு கூட பயம் விட்டு போச்சு. உ ம் - நேபாளம். மோடியின் பேச்சும் செயல் பாடுகளும் அவர்களுக்கு தைரியத்தை தருகிறது. மோடி வீட்டிற்கு சென்ற பின்தான் இதன் காரணம் என்ன என்று உண்மையான விசாரணை செய்ய முடியும். மோடி எதையெல்லாம் மறக்க கோவில் பிரச்சினையை கையில் எடுக்கிறார்
Rate this:
Anand - chennai,இந்தியா
06-ஆக-202016:00:07 IST Report Abuse
Anandமதம்மாறி கைக்கூலிகள் புத்தி இப்படித்தான் பேசும். நீ முட்டுக்கொடுக்கும் கூட்டம் அழியும் வரை இந்தியாவிற்கு பெரும் தொல்லையாகத்தான் இருக்கும்....
Rate this:
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )Raj உன்னை போன்ற தேசத்துரோகிகளை நாட்டைவிட்டு துரத்தினால் நாடு உருப்படும்...
Rate this:
Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா)நீயும் உன் முரசொலி மூளையும்... இதற்கு முன் காங்கி அரசு இந்தியாவின் எல்லை பாதுகாப்பைப்பற்றி கவலைப்படவே இல்லை... அதனால் அந்நிய ஊடுருவல்கள் எல்லாம் மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டன... அதுமட்டுமில்லை.. அந்நிய அத்துமீறல்களுக்கு எதிராக எந்த ராணுவ நடவடிக்கையும் பயந்தாங்கொள்ளி பக்கோடா காங்கி அரசு மேற்கொள்ளவில்லை... இப்போது மோடிஜி அரசு நாட்டின் பாதுகாப்பை மிகவும் திறம்பட கையாள்கிறது... நாட்டின் எல்லைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன... அதைப்பார்த்து சீனாவே ஆத்திரமடைந்துதான் எல்லையில் அத்துமீறுகிறது... நேபாளத்தையும் இந்தியாவிற்கெதிராக தூண்டிவிடுகிறது... கூடிய விரைவில் சீனாவை அலறவிடப்போகிறது இந்தியா......
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
07-ஆக-202000:24:28 IST Report Abuse
Amal Anandanகேள்வி கேட்பவர்களை எல்லாம் நாட்டை விட்டு துரத்திவிட்டால், நேபாளம் இந்திய பேச்சை கேட்கும்? இல்லை சீன இந்தியாவிற்கு அடிபணியும்? எதுக்கு எடுத்தாலும் எல்லோரையும் நாட்டை விட்டு துரத்தணும்ங்கிறீங்க, என்னதான் உங்க பிரச்சினை?...
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
06-ஆக-202015:33:50 IST Report Abuse
vnatarajan சீனா பேச்சுவார்த்தை நடத்துவதெல்லாம் வெறும் போலித்தனம் . சீன போருக்கு தயார் ஆகிக்கொண்டிருக்கிறது. ஆகையால் நாமும் எல்லையில் வீரர்களையும் பீரங்கிகளை அவர்களுக்கு எதிராக குவித்து போருக்கு தயாராகவேண்டியதுதான்.கொரோனா பரவல் விஷயத்தில் சீனாவின் நடவடிக்கைகளுக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன ஆகையால் இந்த தருணத்தை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு போருக்கு தயாராகவேண்டியதுதானே.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
06-ஆக-202014:12:35 IST Report Abuse
மலரின் மகள் நமது ராணுவத்தை அங்கே பெருக்கி யுத்தத்தின் மூலம் சீனாவை வெல்ல சமயம் பார்த்து கொண்டே இருக்கவேண்டும். நமக்கு சாதகமான இத்தருணத்தை இழந்து விடக்கூடாது. தென் சீனக்கடல் பகுதியில் இருக்கும் அவர்களது ராணுவ தளங்கள் நமது எல்லை நோக்கி வர வாய்ப்பில்லை. மேலும் நாம் அந்த பகுதி தேசத்தவர்களுக்கு நிறைய ராணுவ உதவிகள் குறிப்பாக ஏவுகணைகளை பெருமளவில் சப்ளை செய்யவேண்டும். ஜப்பானை அவர்களுக்கு சொந்தமான தீவில் பக்கம் யுத்தம் செய்வதற்கு உறுதுணையாக இருக்கவேணும். ஹாங்காங், தைவான் மக்களுக்கு ராணுவ உதவியும் பயிற்சியும் அமெரிக்க கூட்டு படையுடன் இணைந்து தரவேண்டும். பாகிஸ்தானின் எந்த பகுதியில் இருந்து சீனானோ கூனானோ பாகிஸ்தானானோ ஒரு சிறு ஏவுகணைகளையை நமது எல்லை பக்கம் திருப்பினாலும் கராச்சியை உடந்தையாக தாக்கி அளிக்கவேண்டும். முதலில் தரும் தாக்குதலே மிகவும் பலமாக இருக்கவேண்டும். சமாதானம் அமைதி யுத்தம் வேண்டாம் என்பதெல்லாம் பேச்சுக்கு மட்டுமே, செயலில் ராணுவ பலம் கொண்டு வெல்லவேண்டும். பிரதமர் பேசினால் மட்டுமே அவர்கள் பல நிபந்தனைகளை சொல்லி அதில் முக்கியமான அவர்களுக்கு சாதகமான வற்றை ஏற்கவைத்து உடன்படிக்கை கொண்டு பின்னேறுவார்கள், ஆகையால் நாம் அந்த கோணத்தில் நகரவே கூடாது. அவர்களின் தலைமை நம் பிரதமரிடம் பேசுவதற்கு இறங்கி வந்து தானாகவே திரும்பி செல்லட்டும். அப்போதும் நமது பகுதிகளை மீட்கும் நடவடிக்கைகளை விட்டு விடவே கூடாது. நாம் சீனனை தாக்க முயல மாட்டோம் என்று எண்ணி கொண்டிருக்கிறார்கள், திருப்பி தான் தாக்குவார்கள் என்று நிச்சயமாக அறிகிறார்கள். நீ வா யுத்தத்திற்கு தோல்வி அடைந்து செல்ல என்று தான் நமது ராணுவம் காத்திருக்கிறது. காலம் தாழ்த்தி கொண்டு போவதை நாம் சாதகமாக செய்து கொள்ளவேண்டும். இன்னும் சிறந்த ஆயுதங்களை கொள்முதல் செய்து கொள்ளவேண்டும். அமெரிக்க தரும் நவீன ஆயுதங்களை பெறவேண்டும். இப்போதே அமெரிக்க நமக்கு துணைக்கோள் மற்றும் அவர்களின் இன்டெலிஜென்ஸ் உதவிகளை தந்து கொண்டிருக்கிறது. சீன கடல் பிராந்தியத்தில் நமக்காதரவாக அவர்களின் மிகவும் வலிமையான கடல் படையை அங்கே நிறுத்தி வைத்திருப்பதுடன் சீனாவின் நடமாட்டத்தை நமக்கு தந்து கொண்டிருக்கிறது. கப்பல் படையில் பயன்படுத்தப்படுகின்ற விமானங்களை சீனாவால் நமது இமயமலைப் பக்கம் கொணர முடியாத அளவிற்கு அங்கே அமெரிக்க கூட்டு பாடகிகள் ஒத்திகையும் கடல் பாதுகாப்பையும் நல்குகின்றன. யுத்தத்தில் தோல்விக்கு வரவேற்போம் சீனனை. ஜெய் ஜவான்.
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
07-ஆக-202000:25:09 IST Report Abuse
Amal Anandanஇப்போ சீனாவை எதிர்கொள்ள நமக்கு தேவை ஆயுத பலம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X