இந்தியா

அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்

Added : ஆக 06, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
UPSC, UPSC Exam, IAS

காரைக்கால்: அரசு பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில், புதுச்சேரி மாநிலத்தில், முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவியை அமைச்சர், கலெக்டர் பாராட்டினர்.

காரைக்கால், பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். கப்பலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புனிதா.தம்பதியின் மகள் சரண்யா, 27; காரைக்கால் ஓ.என்.ஜி.சி., பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார். அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 முடித்தார்.

புதுச்சேரி இன்ஜினியரிங் கல்லுாரியில், இ.சி.இ., பிரிவில், 2015ல், பட்டம் பெற்றார். மூன்றாவது முறையாக எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில், 36வது இடத்திலும், புதுச்சேரி மாநிலத்தில் முதலிடத்திலும், தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். சரண்யாவை, அமைச்சர் கமலக்கண்ணன், கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.

சரண்யா கூறியதாவது: நான் அரசு பள்ளியில் படித்தேன். பள்ளி பருவத்திலேயே ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என விரும்பினேன். அதனால், சிவில் சர்வீஸ் தேர்விற்கான பயிற்சி எடுத்தேன். இருமுறை தோல்வி அடைந்தாலும், விடா முயற்சி மேற்கொண்டதில், மூன்றாம் முறை தேர்வில், அகில இந்திய அளவில், 32வது இடமும், மாநிலத்தில் முதலிடத்திலும் தேர்ச்சி பெற்றிருப்பது பெருமையாக உள்ளது.

முயற்சியும், கடின உழைப்பும் இருந்தால், அரசு பள்ளி மாணவர்களும் ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதிக்கலாம். கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன்.இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஆக-202007:54:44 IST Report Abuse
Bhaskaran வாழ்த்துக்கள் மகளே லஞ்சத்தில் சிக்காமல் அடிமட்ட ஏழைகளுக்கு பனி செய்து அவர்களின் ஆசிகளை பெற வாழ்த்துகிறேன்
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
08-ஆக-202010:46:24 IST Report Abuse
chennai sivakumar Arasu palli enbathu state govt school.ongc school need not be a state govt. School. Anyway congratulations for your achievements
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
06-ஆக-202020:42:58 IST Report Abuse
skv srinivasankrishnaveni பிரமாதமா பண்ணிருக்கே இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் மென்மேலும் சிறப்பாக செயல்பட்டு நோ லஞ்சம் பேராசை இன்றி செய்வாய் என்று நம்புகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X