அரசியல் செய்தி

தமிழ்நாடு

கு.க.செல்வம் பதவிகள் பறிப்பு: விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்'

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின், செல்வம், பதவி பறிப்பு

சென்னை : 'முடிந்தால் என் மீது நடவடிக்கை எடுங்கள்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு சவால் விடுத்த ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. - கு.க.செல்வம் வகித்த தலைமை நிலைய செயலர் தலைமை செயற்குழு உறுப்பினர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ. - கு.க.செல்வத்திற்கு மாவட்ட செயலர் பதவி வழங்காமல் இளைஞரணி செயலர் உதயநிதியின் ஆதரவாளர் சிற்றரசுக்கு வழங்கப்பட்டது. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி போட்டியிடுவதற்கு வசதியாக கு.க.செல்வத்திற்கு வரும் தேர்தலில் 'சீட்' இல்லை என்ற முடிவும் எடுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த கு.க.செல்வம் நேற்று முன்தினம் பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார்.

இதையடுத்து நேற்று காலையில் சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பொருளாளர் துரைமுருகன், அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதன்பின் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் 'தி.மு.க. தலைமை நிலைய செயலர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் வகித்த வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்' என அறிவித்துள்ளார்.

தி.மு.க. தலைமை அறிக்கையில் 'கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செல்வம் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.'கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்க கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது' என கூறப் பட்டுள்ளது.


'தி.மு.க.,வில் குடும்ப அரசியல்'

''தி.மு.க.வில் வாரிசு அரசியல் போய் குடும்ப அரசியல் வந்து விட்டது. தி.மு.க.வில் உள்ளவர்கள் பா.ஜ.விற்கு வர வேண்டும்'' என அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.வில் சேர்ந்துள்ள கு.க.செல்வம் தெரிவித்தார்.

அயோத்தியில் நேற்று ராமர் கோவில் கட்ட பிரதமர் அடிக்கல் நாட்டினார். அதையொட்டி தமிழக பா.ஜ. அலுவலகத்தில் ராமர் படத்திற்கு பூஜை நடத்தப்பட்டது. இதில் தி.மு.க.- - எம்.எல்.ஏ. - கு.க.செல்வம் பங்கேற்றார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க.வில் இருந்து தைரியம் இருந்தால் என்னை நீக்கட்டும். என்னை 'சஸ்பெண்ட்' செய்துள்ளனர். என்னை நீக்கினாலும் கவலை இல்லை. பொது மக்களுக்கு உழைப்பதற்காகவே எம்.எல்.ஏ. ஆனேன். நான் 50 ஆண்டுகள் திராவிட கட்சியில் இருந்துள்ளேன். எம்.ஜி.ஆரிடம் 25 ஆண்டுகள் இருந்துள்ளேன். 25 ஆண்டுகள் கருணாநிதி, ஸ்டாலினிடம் இருந்துள்ளேன்.

கடவுள் முருகனை விமர்சித்தவர்களை ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை. தி.மு.க.வில் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். தி.மு.க.வில் தந்தை அடுத்து பிள்ளை தற்போது பேரன் என வாரிசு அரசியல் போய் குடும்ப அரசியல் வந்துள்ளது.தி.மு.க. வில் இருப்போருக்கு எனக்கு ஏற்பட்ட நிலை தான் ஏற்படும். எனவே தி.மு.க.வில் உள்ளவர்கள் பா.ஜ.வில் இணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக பா.ஜ. துணை தலைவர் வி.பி.துரைசாமி கூறியதாவது: எம்.எல்.ஏ. செல்வம் பா.ஜ.வில் இன்னும் இணையவில்லை. சிறப்பாக செயல்படும் மத்திய அரசை பாராட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.என்னை போன்ற மூத்த கட்சிக்காரர்கள் தி.மு.க.விலிருந்து வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலின் குடும்பத்தில் உள்ள மகன், மருமகன்,மருமகள் நிர்வாகிகளை மதிப்பதில்லை.தமிழகத்தில் குடும்பத்திற்காக கட்சி நடத்துவதை பா.ஜ. எதிர்க்கும். தி.மு.க.வில் உள்ள அதிருப்தியாளர்கள் காலம் தாழ்த்தாமல் பிரதமர் மோடி கரத்தை வலுப்படுத்த பா.ஜ. அலுவலகம் வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஆக-202020:19:49 IST Report Abuse
பாமரன் இப்படித்தான் முருவனை தலிவரா போட்டப்போ கோச்சுக்கிட்டு இருந்தாங்க... இப்படியே இருந்தா எப்படி....???
Rate this:
Cancel
Mani -  ( Posted via: Dinamalar Android App )
06-ஆக-202018:45:39 IST Report Abuse
Mani நீங்க இப்படி பேச இந்த மக்களே காரணம்
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
06-ஆக-202017:18:52 IST Report Abuse
Thiagarajan Kodandaraman அந்த கட்சியில் இன்னும் நீடித்துக் கொண்டு வசதியாய் வாழ்பவர்கள் அந்த குடும்ப சொத்துக்களின் காவல்காரர்களாக தான் இருக்க வாய்ப்பு உள்ளது ஆகயால் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நடக்கவேண்டும் என்று எண்ணுபவர்கள் அந்த தீய சக்தி கூட்டத்தில் இருந்து வெளியேறனும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X