பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சிலை வைக்க அனுமதி வேண்டும்: அரசிடம் ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தல்

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
விநாயகர் சிலை, விநாயகர் சதுர்த்தி, ஹிந்து அமைப்புகள்

சென்னை : 'விநாயகர் சதுர்த்தியையொட்டி, பொது இடங்களில், விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி அளிக்க வேண்டும்' என, ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள், தலைமை செயலரிடம் வலியுறுத்தினர்.

வரும், 22ம் தேதி, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், பொது இடங்களில், பிரமாண்டமான விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். இது தொடர்பாக, ஹிந்து மத அமைப்புகளின் நிர்வாகிகளுடன், நேற்று தலைமை செயலகத்தில், தலைமை செயலர் சண்முகம், ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில், டி.ஜி.பி., திரிபாதி, உள்துறை செயலர் பிரபாகர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி, இந்து தமிழர் கட்சி உட்பட, பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அனைவரும் விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகள் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும்; கோவில்களை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கூட்டம் முடிந்த பின், இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கூறியதாவது: விநாயகர் சிலைகள் அமைக்க, அனுமதி அளிக்க வேண்டும். நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பது சம்பந்தமாக, அரசு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அரசு சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த வேண்டும்.

மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, மதுபானம் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவில்கள் மூடப்பட்டுள்ளன; அவற்றை திறக்க வேண்டும். பக்தர்கள் தனி மனித இடைவெளியை கடைபிடித்து, இறைவனை வணங்கி செல்வர்.'இ -- பாஸ்' நடைமுறையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

எங்கள் கருத்துக்களை கேட்ட தலைமைச் செயலர், முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஆக-202016:42:43 IST Report Abuse
தமிழன் ஏன்டா நீர் நிலைகளை தமிழ்நாட்டில் நாசம் பண்றீங்க..போய் வடநாட்டுல கொண்டாடுங்க போங்க..இது தமிழ்நாட்டு கலாச்சாரம் அல்ல..
Rate this:
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
06-ஆக-202004:16:37 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை எதுக்கெடுத்தாலும் டாஸ்மாக்கை திறந்துட்டாங்க ,டாஸ்மாக்கை திறந்துட்டாங்கன்னு மதுப்பிரியர்கள் மேல் மொத்த நாடே பொறாமைப்படுது , மது பிரியர்களுக்கு திருஷ்டி சுத்தி போடணும் , அடுத்தவங்க பொறாமைப்படுற மாதிரி வாழும் வாழ்க்கைல அவ்வளவு ஒரு பெருமை இருக்கு
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-ஆக-202003:59:05 IST Report Abuse
J.V. Iyer அதிமுகவும் திமுகவும் ஒன்று. ஜெயலலிதா காலமானவுடன் இவர்களுக்கு வித்யாசம் கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X