பொது செய்தி

இந்தியா

சகோதரத்துவத்தின் அடையாளம்: ஹிந்துக்களுக்கு இணையாக முஸ்லீம்கள் மகிழ்ச்சி

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (62)
Share
Advertisement
அயோத்தி: அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்ததை, ஹிந்துக்கள் கொண்டாடி வரும் நிலையில், அதற்கு இணையான மகிழ்ச்சியை முஸ்லிம்களும் தெரிவித்து உள்ளனர்.அயோத்தியைச் சேர்ந்த, சன்னி முஸ்லிம் சமூக அமைப்பின் தலைவரான, ராஜா ரயீஸ் கூறியுள்ளதாவது: ராமரை நாங்கள், 'இமாம் இ ஹிந்த்' எனப்படும், இந்தியாவின் மதகுருவாக கருதுகிறோம். பூமிபூஜை நடப்பதால் மிகுந்த
Muslims, Ayodhya, Ram Temple, Hindu, Bhoomi pujan, Bhumi Pujan, Ram Janmabhoomi, Ram Mandir

அயோத்தி: அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்ததை, ஹிந்துக்கள் கொண்டாடி வரும் நிலையில், அதற்கு இணையான மகிழ்ச்சியை முஸ்லிம்களும் தெரிவித்து உள்ளனர்.

அயோத்தியைச் சேர்ந்த, சன்னி முஸ்லிம் சமூக அமைப்பின் தலைவரான, ராஜா ரயீஸ் கூறியுள்ளதாவது: ராமரை நாங்கள், 'இமாம் இ ஹிந்த்' எனப்படும், இந்தியாவின் மதகுருவாக கருதுகிறோம். பூமிபூஜை நடப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். கொரோனா காரணத்தால், கோவில் கட்டுமானம் நடைபெறும் இடத்துக்கு தற்போது செல்ல முடியவில்லை. நாங்களும், கரசேவகர்கள் தான். கோவில் கட்டுமானத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில், சகோதரத்துவத்தின் அடையாளமாக விளங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.


latest tamil news


இதேபோல், பல்வேறு முஸ்லிம் தலைவர்கள், தனிநபர்களும், கோவில் கட்டுமானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியுள்ளதாவது: ராமர் கோவில் இயக்கத்தை, ஹிந்து - முஸ்லிம் இடையேயான பிரச்னையாக சிலர் கூறி வருகின்றனர். தற்போது நடந்துள்ள பூமி பூஜை, அதுபோன்றவர்களின் முகத்தில் விழுந்த அடியாகும். பூமி பூஜையை, நாங்கள் இரட்டிப்பு ஈத் விழாவாக கருதுகிறோம். அயோத்தி ராமர் கோவில், ஹிந்து - முஸ்லிம் மக்களிடையேயான சகோதரத்துவத்தின் அடையாளமாக எப்போதும் விளங்கும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
06-ஆக-202016:06:44 IST Report Abuse
Vijay D Ratnam வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம். மேலே உள்ள படத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு மனம் குளிர தீபாராதனை காட்டும் அந்த சகோதரியின் முகத்தைப் பாருங்கள். என்ன ஒரு தேஜஸ், என்ன ஒரு கருணை. இஸ்லாமியர்கள் என்றாலும் இந்தியாவை பொறுத்தவரை அவர்களின் மூதாதையர்கள் ராமரை, கிருஷ்ணரை, சிவனை, பெருமாளை, துர்கையை, காவல்தெய்வங்களை வழிபட்டவர்கள் தானே, அவர்களும் சில தலைமுறைகளுக்கு முன் ஹிந்துக்கள் தானே. இந்தியாவில் இஸ்லாம் 200 - 300. வருடங்களாகத்தானே. உ.பி முதல்வரே, ராமர் கோவில் கட்டிமுடித்ததும் ஒட்டுமொத்த உலகிலிருந்தும், நம் நாட்டின் அனைத்து நகரங்கள், மாநகரங்கள்,கிராமங்கள் என மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் 24 மணிநேரமும் கூட்டம் அலைமோதும். இப்போதிலிருந்தே அகலமான சாலை வசதிகள், ரயில் பாதை வசதிகள், பன்னாட்டு விமானநிலையம் எல்லாவற்றையும் பெரிய அளவில் பிளான் போட்டு பக்காவாக வேலையை தொடங்குங்கள். மெக்கா, வாடிகன், ஜெருசலம் போல இனி .அயோத்தி திகழும். வாரணாசிக்கு வரும் அணைத்து மக்களும் அயோத்திக்கு வருவார்கள். இந்தியாவின் லேண்ட்மார்க் ஆக அயோத்தி உருவாகும்.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
06-ஆக-202015:53:10 IST Report Abuse
vnatarajan தற்போது உள்ள உலக சூழ்நிலையில் நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு எல்லா சமூகத்தினரும் ஓற்றுமையாக வாழவேண்டும் என்பதை இந்திய முஸ்லீம்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதை மற்ற மதங்களும் புரிந்து வாழவேண்டும்
Rate this:
Cancel
Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ
06-ஆக-202015:20:52 IST Report Abuse
Unmai Vilambi ராமர் கோயில் வேறுகிறதோ இல்லையோ - இந்த காங்கிரஸ், DMK போன்ற காட்சிகள் அழிய வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X