பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரி காலம்புழா அணையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020
Share
Advertisement
nilgiris, ooty, rain, weather report, nilgiris rain, நீலகிரி, காலம்புழா, அணை, வெள்ளப்பெருக்கு

நீலகிரி: வெளுத்து கட்டும் கன மழையால், நீலகிரி மாவட்டத்துக்கு, மூன்றாம் நாளாக, இன்றும், 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நீலகிரி மாவட்டம் காலம்புழா உள்ளிட்ட அணையில் மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கூடலூரில் கனமழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. தவிர நீலகிரியின் முதல்மைல், கொக்காகாடு ஆகிய பகுதிகளிலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்தன. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 18 பேர் கொண்ட மீட்பு குழுவினர் இரு பிரிவுகளாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil news




வேகமாக நிரம்பி வரும் பவானி சாகர் அணை



கனமழை காரணமாக ஈரோடு பவானி சாகர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. ஈரோடு மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பவானி சாகர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. 105 அடி உயரம் கொண்ட இந்த அணை நீர்மட்டம் தினமும் 2 அடி உயர்ந்து வருகிறது. தற்போது அணை நீர்மட்டம் 91.75 அடியாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X