கொரோனா மருத்துவமனையில் தீ: பலியான 8 பேரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - மோடி அறிவிப்பு

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Ahmedabad, Covid 19 Hospital, hospital Fire, PM Modi, ஆமதாபாத், கொரோனா, மருத்துவமனை, தீ விபத்து, உயிரிழப்பு, பிரதமர், மோடி, இரங்கல், நிதியுதவி, நிவாரணம்

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் நவரங்க்பூர் பகுதியில் உள்ள ஷ்ரே மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (ஆக.,06) அதிகாலை மருத்துவமனையின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 8 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 35 க்கும் மேற்பட்ட நோயாளிகள், வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


latest tamil news



இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில், ‛ஆமதாபாத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தம் அளிக்கிறது. துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். முதல்வர் விஜயரூபானி மற்றும் மேயரிடம் மீட்பு பணிகள் குறித்து பேசினேன். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்,' என தெரிவித்துள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
06-ஆக-202016:20:21 IST Report Abuse
Ellamman நேத்து விழாவில் எதோ தெய்வ குத்தம். அதனால் தான் பிரதமர் மாநிலத்தில் தீ விபத்து....மோடி ராசி நல்ல ராசி....
Rate this:
Cancel
06-ஆக-202011:00:41 IST Report Abuse
ஆப்பு முன்னாடி நாலு லட்சம்னு சொன்னாங்களே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X