பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் ஒத்துழைப்பால் பரவல் குறைகிறது: முதல்வர் இ.பி.எஸ்.,

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, திண்டுக்கல், முதல்வர், முதல்வர்  இபிஎஸ்,

திண்டுக்கல்: மக்களின் ஒத்துழைப்பால் கொரோனா பரவல் குறைந்து வருகிறது என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் இபிஎஸ் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய பின்னர், நடுத்தர தொழில் பிரதிநிதிகள், விவசாயிகள், சுய உதவிக்குழுவினர் ஆகியோரை சந்தித்து உரையாற்றினார்.

அப்போது முதல்வர் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் மாநில அரசு செய்கிறது. மருத்துவமனைகளில் புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வசதிகளும் மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால், சுமார் 210 நாடுகள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன.


latest tamil newsஇந்த நோய்க்கு இதுவரை மருந்து இல்லை என்பதால், நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு செல்கின்றனர். மேலும் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் ஒத்துழைப்பால் தான் பரவல் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு உயிரும் அரசுக்கு மிக முக்கியம். மக்களை காப்பது தான் அரசுக்கு முக்கிய கடமை. நோய்க்கான அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவமனை சென்று பரிசோதனை செய்ய வேண்டும். அரசு அறிவிக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். வெளியே செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வெளியே சென்று வந்த பின் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். வீடுகள், கழிப்பறைகளை சுத்தமாக வைக்க வேண்டும். வேளாண் பணிகள் எவ்வித தடையும் இல்லாமல் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
06-ஆக-202013:15:23 IST Report Abuse
RajanRajan ஆமாம் அண்ணா மக்களின் உயிரும் முக்கியம் அந்த டாஸ்மாக் கடையும் உங்களுக்கு முக்கியமாச்சே.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
06-ஆக-202013:14:14 IST Report Abuse
RajanRajan அது எப்படி அண்ணா இந்த இ பாஸ் லஞ்ச வித்தை மட்டும் நாளுக்கு நாள் கோரானவை விட வேகமா பரவிகிட்டே இருக்கே. இதுக்கு அந்த குரானா ஏவுளாவோ பரவாயில்லை போல தெரியுது. உங்களுக்கு எப்படி தெரியுதாம் அண்ணா. ஒண்ணுமே தெரியாதே. என்னிக்கு இந்த பாஸ் க்கு விடுதலை கொடுப்பீக.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
06-ஆக-202012:33:19 IST Report Abuse
siriyaar People properly wearing and social distance while buying quarter, currently only that business only runs in profit, while all others crying ministers and MLA and politicians enjoy the earnings as usual.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X