சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

அலங்காரமாக பேசி அப்பாவிகளை திசை திருப்பலாம்...?

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
அலங்காரமாக பேசி அப்பாவிகளை திசை திருப்பலாம்...?

'இப்படியே, அலங்காரமாக பேசி, அப்பாவி மக்களை திசை திருப்பி, காலம் காலமாக அரசியல் செய்கிறீர்களே... உங்களுக்கே இது நல்லா இருக்கா... நம் மாநில மக்களை, முட்டாள்கள் என்ற, 'ரேஞ்சிலேயே' வைத்துப் பேசுகிறீர்களே...' என, கண்டிக்கத் துாண்டும் வகையில், தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் அறிக்கை:

புதிய கல்விக் கொள்கையை பாராட்டி சிலர் பேசலாம். அதில் அவர்களுக்கு நன்மை இருக்கலாம். ஆனால், நமக்கோ, மத்திய அரசு, நம் தலையில் கிரீடத்தை வைத்து விட்டு, தலையை வெட்டப் பார்க்கிறது என்ற நிலை தான்.

'வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கும், தி.மு.க., தொழிலாளர்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற, கேள்வி எழுகிறதே...' என, கேட்கத் தோன்றும் வகையில், தொ.மு.ச., செயலரும், தி.மு.க., - எம்.பி.,யுமான சண்முகம் அறிக்கை:

'வெள்ளையனே வெளியேறு' நினைவு தினம், வரும், 9ல் வருவதால், 8லிலேயே, சமூக விலகலை பின்பற்றி, அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டம் நடத்துவர். இந்த போராட்டம், நெசவு, விவசாயம், கட்டுமானம், புலம்பெயர் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மீட்கும்.

'இப்படித் தானே, காலம் காலமாக செய்து வருகின்றனர்...' என, சொல்லத் தோன்றும், பா.ஜ., தேசிய பொதுச் செயலர், எச்.ராஜா அறிக்கை:


latest tamil news




இருமொழி கொள்கை தான் தமிழகத்திற்கு தேவை என்று பேசும் கட்சித் தலைவர்கள், முதலில் அதை, தங்கள் குடும்பத்தில் கடைப்பிடிக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை, மூன்று மொழி பள்ளிகளில் சேர்த்து விட்டு, அரசு பள்ளிகளில், ஏழை குழந்தைகளை, மூன்று மொழிகளை படிக்க விட மாட்டேன் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.

'இப்படி அடிக்கடி நன்றி, பாராட்டு தெரிவித்தால் தான், கட்சியில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது பிறருக்கு தெரியும்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு தலைவர், பால் கனகராஜ் அறிக்கை:

கொரோனாவால் பொருளாதார பாதிப்பை மீட்க, 3 லட்சம் கோடி ரூபாய், சிறப்பு கடன் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட சேவை பிரிவினரும் பயன்பெற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு நன்றி.

'டாக்டர்கள் மீது திடீர் கரிசனம் ஏன்; கொரோனா எதிர்ப்பு பணியில் மும்முரமாக அவர்கள் ஈடுபட்டுள்ளதை தடுக்க நினைக்கிறீர்களா...' என, நெத்தியடியாக கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை:

இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிக மருத்துவர்கள், கொரோனாவால் பலியாவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் கொரோனா மரணங்களைத் தவணை முறையில் வெளியிடும், அ.தி.மு.க., அரசு, மருத்துவர்கள் நிலை குறித்தும் விளக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
09-ஆக-202019:03:59 IST Report Abuse
madhavan rajan இருமொழிக் கல்விதான் தமிழகத்திற்கு வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கூறி ஆட்சிக்கு வந்தால் அந்த இருமொழிகள் தவிர (தமிழ், ஆங்கிலம்) வேறு எந்த மொழிகளும் தமிழ்நாட்டில் எந்த பள்ளிகளிலும் கற்பிக்கக்கூடாது என்று அனைவரும் போராடவேண்டும். கூறுவது ஒன்று, பிறகு அவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் இந்திய மொழிகள் தெலுங்கு போன்றவை அல்லாமல் அந்நிய நாட்டு மொழிகளையும் கற்பிப்பார்கள். அதை எதிர்க்கவேண்டும். அரபி மொழி பள்ளிகளுக்கு அனுமதி அளித்தால் எதிர்க்கவேண்டும். இரு மொழிக்கு கல்வி என்று முடிவெடுத்தால் வேறு எந்த மொழியும் பள்ளிகளில் கூடாது என்பதை மக்காள் வலியுறித்தினாலே கட்சிகள் வழிக்கு வருவர்.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
07-ஆக-202004:06:43 IST Report Abuse
meenakshisundaram மூணு பொண்டாட்டி வச்சுக்கலாம்னா மூணு மொழி கூடாதா?ஏனுங்கோ ,புரியாமாத்தான் கேக்குறேன்
Rate this:
Cancel
samvijayv - Chennai,இந்தியா
06-ஆக-202019:23:40 IST Report Abuse
samvijayv சேலை மட்டும் உருவியே.., கட்சியில் தடாலடி ஓர் அரசியல் வாதியாக காட்டும் நீங்களா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X