அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்: முதல்வர் மீண்டும் உறுதி

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (49+ 5)
Share
Advertisement
Bilingual policy, tamil nadu, new education policy,
தமிழகம், இருமொழிக்கொள்கை, முதல்வர், உறுதி, இபாஸ், திண்டுக்கல்

திண்டுக்கல்: தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும், அதில் மாற்றமில்லை என முதல்வர் இபிஎஸ் உறுதிபட தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் இபிஎஸ் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய பின்னர், நடுத்தர தொழில் பிரதிநிதிகள், விவசாயிகள், சுய உதவிக்குழுவினர் ஆகியோரை சந்தித்து உரையாற்றினார். அப்போது முதல்வர் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் மாநில அரசு செய்கிறது. இந்த நோய்க்கு இதுவரை மருந்து இல்லை என்பதால், நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு செல்கின்றனர். மேலும் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் ஒத்துழைப்பால் தான் பரவல் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


பின்னர் திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகளவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் சிறப்பு குறைதீர்ப்பு திட்டம் மூலம் 9,105 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது, 3 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மக்களின் நீண்டநாள் கனவான மருத்துவக் கல்லூரி விரைவில் அமையவுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.


latest tamil news



இருமொழிக் கொள்கை

உலக முதலீட்டாளர் மாநாடு ஒப்பந்தம் மூலம் திண்டுக்கலில் 400 பேருக்கு வேலை வழங்கும் வகையில் தொழில் தொடங்கப்பட உள்ளது. 2019ம் ஆண்டு முதலீட்டாளர் மாநாடு மூலம் 3 நிறுவனங்கள் ரூ.300 கோடியில் திண்டுகல்லில் தொடங்க உள்ளன. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும், அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஏதாவது பேசி வரும் எஸ்.வி.சேகர், வழக்கு வந்தால் ஒளிந்துகொள்வார். அவர் பாஜ.,வை சேர்ந்தவர் எனில் பிரசாரத்திற்கு ஏன் வரவில்லை? அவர் முதலில் எந்த கட்சியை சேர்ந்தவர்? பாஜ.,வை சேர்ந்த நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுக.,வுக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம்.


இ-பாஸ்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாதம் ஒருமுறை இ-பாஸ் புதுப்பித்தால் போதுமானது. வெளி மாநில தொழிலாளர்களை தமிழகத்திற்கு தாராளமாக அழைத்து வரலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (49+ 5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
06-ஆக-202021:05:00 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN சரி முதல்வரே. மூன்றாவது மொழி கற்க அவா, ஆசை படும் மாணவ மாணவிகளுக்கு தனியார் பள்ளியில் பயில கட்டணத்தை அரசு செலுத்தினால் நல்லது உம் கொள்கையை வரவேற்கலாம். அவசியம் மூன்றாவதாக ஓர் மொழி வேண்டும் .
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
06-ஆக-202020:35:51 IST Report Abuse
வெகுளி இருமொழியும் வேண்டாம் மும்மொழியும் வேண்டாம்.... நமக்கு தேவை பன்மொழிக் கொள்கை.... கல்வி கற்பது மக்களின் உரிமை, கர்ப்பிப்பது அரசின் கடமை.... இதில் அரசியல் செய்வது திராவிட மடமை..... ( மன்னிச்சுடுங்க TR)
Rate this:
Cancel
மக்குமக்கு - அரையூர்,இந்தியா
06-ஆக-202020:30:33 IST Report Abuse
மக்குமக்கு டாஸ்க்மார்க் விவகாரத்தில் அதிமுக , திமுக கூட்டணி எப்படியோ . அப்படி இரு மொழி கொள்கைகளிலும் கூட்டு களவாணிகள் . பணக்காரன் தனியார் பள்ளிகளில் சேர்ந்து பல மொழிகள் கற்கிறான் . ஆனால் ஏழை என்ன செய்வான் . அதிமுக , திமுக கட்சிகாரர்கள் வாரிசுகள் சிபிஸ் பாடத்திட்டத்தில் ஹிந்தி கற்றுகொள்கிரார்கள் . ஹிந்தியை கடுமையாக எதிர்க்கும் கருணா குடும்பம் மட்டும் ஹிந்தி தெரிகிறது . எப்படி? சாதாரண தொண்டன் சிந்திக்கணும் . மக்கள் ஹிந்தி உட்பட பல மொழிகள் கற்றால் திராவிட கட்சிகளின் தில்லுமுல்லுகள் தெரியவரும் என்ற பயம் உள்ளது . இருமொழிகள் திராவிட கட்சிகள் உறுதியாக இருந்தால் தமிழ் நாட்டில் மத்திய பள்ளிகளை மூட சொல்லவேண்டும் . செய்வார்களா . முதல்வர்களுக்கு உறுதி இருந்தால் இருமொழிகளுக்கு எதிராக உள்ள தனியார் கல்விகளை மூடுங்கள் பார்ப்போம் . அண்டை திராவிட மாநிலங்கள் எதிர்க்கவில்லை . தமிழனை கடைசி வரை முட்டாளாக வைக்க வேண்டும் என்று திராவிட கொள்கை . ஆனால் இப்போது உங்கள் கொள்கை வேகாது மும்மொழி கொள்கை உள்ள புதிய கல்விகொள்கையை பல மாணவர்கள் , பெற்றோர்கள் ஏற்று கொள்கிறார்கள் என்பதை புரியமால் ஸ்டாலின் வலையில் அதிமுக விழுந்துவிட்டது . பிஜேபி தமிழ் நாட்டில் வளர சரியான சந்தர்ப்பம் வந்துள்ளது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X