சென்னை: தமிழகத்தில் இ- பாஸ் நடைமுறை வெளிப்படை தன்மையற்று ஊழலுக்கு வழிவகுக்கிறது என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு:தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை வெளிப்படைத் தன்மையற்று ஊழலுக்கு வழிவகுக்கிறது.திருமணம், இறப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டு மக்கள் துன்பத்திற்குள்ளாகிறார்கள். முழுமையாகத் தோல்வியடைந்துவிட்ட இ-பாஸ் இனியும் தேவையற்றது. உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். இ-பாஸ் முறையை நீட்டித்து மக்களை துன்புறுத்தி வருவது அடுக்கடுக்கான எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் #epass நடைமுறை வெளிப்படைத்தன்மையற்று ஊழலுக்கு வழிவகுக்கிறது.
திருமணம், இறப்பு உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டு மக்கள் துன்பத்திற்குள்ளாகிறார்கள்.
முழுமையாகத் தோல்வியடைந்துவிட்ட இ-பாஸ் இனியும் தேவையற்றது. உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்! pic.twitter.com/AKm489Elwi
— M.K.Stalin (@mkstalin) August 6, 2020
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE