சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சுய பரிசோதனையில் பிரபல ஆராய்ச்சியாளர்கள்!

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020
Share
Advertisement
 சுய பரிசோதனையில் பிரபல ஆராய்ச்சியாளர்கள்!

விரைவில் தடுப்பு மருந்து வராததால் பொறுமையிழந்துள்ள சில ஆராய்ச்சியாளர்கள், தங்கள் மீதே புதிய தடுப்பு மருந்தை சோதனை செய்து பார்க்க தீர்மானித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டை சேர்ந்த பிரபல மரபணு விஞ்ஞானியான ஜார்ஜ் சர்ச், மற்றும் அவரது குழுவினர், அண்மையில் கொரோனா தடுப்பு மருந்து சோதனைக்கு புதிய முறையை கையாளத் துவங்கியுள்ளனர். இந்தக் குழுவுக்கு 'ரேட்வேக்' (RadVac) என்று பெயர்.'எம்.ஐ.டி., டெக்னாலஜி ரிவ்யூ' இதழில் வெளியாகியுள்ள செய்தியின் படி, இந்த ஆய்வு, பல விஞ்ஞானிகள் தன்னார்வலர்களாக முன்வந்து நடத்தப்படுகிறது.

ஏற்கனவே பரவலாக கிடைக்கும் உயிரி மற்றும் வேதிப் பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்தை, மூக்கின் வழியே சொட்டு மருந்து வடிவில் தன்னார்வலர்களுக்கு செலுத்துகிறது 'ரேட்வேக்' குழு. இதற்கு பலன் உள்ளதா என்பது இன்னும் தெரியவில்லை.பொதுநலன் கருதியே இந்த தன்னார்வலர் குழு செயல்படுகிறது என்றாலும், இது விபரீதமான பரிசோதனையாக முடியும் ஆபத்து இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகளே எச்சரிக்கையும் செய்துள்ளனர்.

இருந்தாலும், அல்சருக்கு காரணம் 'எச்.பைலோரி' என்ற பாக்டீரியா தான், என்பதை நிரூபிக்க, பாக்டீரியாவை குடித்து, நோபல் பரிசு வென்ற பேரி மார்ஷல் போன்ற பல முன்னுதாரணங்கள் அவர்களுக்கு உண்டு. ஏன், ஹெப்பாடிடிஸ் பி மற்றும் எ.பி.வி., போன்ற நோய்களுக்கும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க சில ஆராய்ச்சியாளர்கள் சுய சோதனைகளில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X