விமானத்தில் மாஸ்க் அணிய மறுத்தவரை வெளுத்து வாங்கிய சக பயணிகள்

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (11) | |
Advertisement
ஆம்ஸ்டர்டேம்: நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டேமில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான ஐபிசா தீவுக்கு புறப்பட்டு சென்ற விமானம் ஒன்றில் முகக்கவசம் அணிய மறுத்த இரண்டு பேரை சக பயணிகள் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச விமானப் போக்குவரத்தும்
Fistfight, Airline, Refuse, ToWearMasks, TwoPassengers, விமானம், பயணிகள், மாஸ்க், அணிய மறுப்பு

ஆம்ஸ்டர்டேம்: நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டேமில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான ஐபிசா தீவுக்கு புறப்பட்டு சென்ற விமானம் ஒன்றில் முகக்கவசம் அணிய மறுத்த இரண்டு பேரை சக பயணிகள் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச விமானப் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இருப்பினும் சில நாடுகள் சிறப்பு விமானங்களை இயக்கி வருகின்றன. சிறப்பு விமானங்களில் பயணம் செய்பவர்கள் முகக்கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டேமில் இருந்து ஸ்பெயினின் ஐபிசா தீவுக்கு கே.எல்.எம் என்ற சர்வதேச விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.


latest tamil news



விமானத்தில் பயணிப்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கூறியும் இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு நபர்கள் மட்டும் முகக்கவசம் அணியாமல் சென்றுள்ளனர். சக பயணிகள் அவர்களை முகக்கவசம் அணியுமாறு கூறியுள்ளனர். ஆனால் அதில் மது அருந்தியிருந்த ஒரு நபர், முகக்கவசத்தை அணிய மறுத்தது மட்டுமல்லாமல் சக பயணிகளை தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். நடுவானில் விமானத்தில் நடந்த சண்டைக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் தரையிறங்கியதும் முகக்கவசம் அணிய மறுத்த பயணிகள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இரா. சந்திரன் - சென்னை,இந்தியா
06-ஆக-202020:16:59 IST Report Abuse
இரா. சந்திரன் சிறு விளக்கம். முக கவசம் என்பது உங்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்க. சக பயணிகள் செய்தது சரியே.
Rate this:
Cancel
06-ஆக-202019:34:58 IST Report Abuse
kulandhai Kannan எல்லோரும் ஒருவழி, இவன் மட்டும் எடமொடக்கு என்பதைப் பார்க்கும்போது, இவன் தமிழ்நாடு வந்து போயிருப்பானோ என்ற சந்தேகம் வருகிறது.
Rate this:
kumaravel - murgab,குவைத்
10-ஆக-202012:53:37 IST Report Abuse
kumaravelதமிழன் எதற்கும் குறைந்தவன் அல்ல. உங்கள் பேச்சை திருத்திக் கொள்ளுங்கள் .இல்லையென்றால் திருத்தப்படுவீர்கள். உங்களுக்கு என்ன தெரியும் தமிழனின் பெருமை. உலகமே தமிழனை கண்டு பெருமை கொள்கிறது நீங்கள் என்னவென்றால். வாழ்க தமிழ் . வெற்றி வேல் வீர வேல் ....
Rate this:
Cancel
06-ஆக-202019:17:32 IST Report Abuse
ராஜ் இவனுங்க ரெண்டு பேர்னால எல்லாருக்கும் சோசியல் டிஸ்டன்சிங் போச்சு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X